முப்படைத் தளங்களுக்குள் பிரவேசிப்பதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி குறிப்பிட்டுள்ளார். கடற்படை அதிகாரி ஒருவரிடம் கிழக்கு முதலமைச்சர் நடந்துகொண்ட விதம் குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னரே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, கிழக்கு முதலமைச்சர் பங்கேற்கும் எந்தவொரு நிகழ்விற்கும், முப்படையினரின் ஒத்துழைப்பை வழங்காமல் இருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கடற்படையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் சம்பூர் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, கடற்படை அதிகாரி ஒருவருடன் கிழக்கு முதலமைச்சர் நடந்துகொண்ட விதம், பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கை பாதுகாப்புச் செயலாளரால் ஜனாதிபதிக்கு நேற்று கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு முப்படைத் தளங்களுக்குள் பிரவேசிக்கத் தடை!

Related Post:
Add Comments