வாகரையில் இறால் பண்ணை அமைப்பது நன்மையா? தீமையா?


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, பனிச்சங்கேணி பகுதியில் இறால் பண்ணை அமைப்பது தொடர்பாக அதிகாரிகள், அரசியல்வாதிகள், மீனவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவிவருவதால் இறால் பண்ணை அமைக்கும் விடயத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மீனவர் சங்க தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் இடையே பல வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று எந்தமுடிவும் எட்டப்படாத சூழ்நிலையில்,கடைசியாக எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் இதுகுறித்த இறுதிமுடிவை அறிவிக்க வேண்டும். இல்லையெனில் இதனை வடக்கில் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் வாகரை பனிச்சங்கேணி பகுதியில் இறால் பண்ணை அமைப்பது மாவட்டத்திற்கு நன்மையா, தீமையா? என்பதை ஆராய வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தின் அபிவிருத்திக்கு குறித்த இறால் பண்ணை செயற்திட்டம் முக்கிய பங்குவகித்தாலும் அதனால் மாவட்டத்தின் சூழல் பாதுகாப்பு பாரம்பரிய இயற்கை முறையிலான நன்னீர் மீன்பிடிதொழில், விவசாயம்,வாகரைக்கே உரித்தான தனித்துவ சிறப்புக்களை கொண்ட இறால், நண்டு, மீன் போன்றவை அழிக்கப்பட்டு எதிர்காலத்தில் சுமார் 8000ற்கு மேற்பட்ட மக்கள் நேரடியாகவும் பகுதியளவிலும் பாதிக்கப்படகூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக மீனவசங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.மறுபுறம் இந்த செயற்திட்டம் மாவட்டத்தின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதுடன் இதன் ஊடாக சுமார் 5000 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள் எனவும்,இது போன்ற இறால் பண்ணைகளின் ஊடாக வெளிநாடுகள் பலகோடி வருமானங்களை பெறுகின்றது என செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் கூறியுள்ளனர்.உண்மையில் இலங்கையில் இதுவரை அமைக்கப்பட்ட இறால் பண்ணைகளின் நிலை என்ன? அதனால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? என்பதை ஆராயவேண்டும்.அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட இறால் பண்ணைகளின் நிலை என்ன?அதனால் மாவட்டத்தில் உள்ள எத்தனை ஆயிரம் மக்கள் பயன் பெற்றுள்ளனர். அதனால் ஏற்பட்டுள்ள சாதக பாதக நிலைகளை அறிந்தே புதிய இறால் பண்ணை ஒன்றிற்கான முயற்சிகளை மேற்கொள்வது சிறந்ததாக இருக்கும்.கிழக்குப் பல்கலைகழகத்தின் ஒத்துழைப்புடன் குறித்த இறால்பண்ணை அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.உண்மையில் இதுபோன்ற ஆய்வுகளை செய்கின்றவர்கள் ஏற்கனவே புத்தளம் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுவரும் இறால் பண்ணைகள்,மற்றும் செயலற்றுப்போன இறால் பண்ணைகளில் இருந்து பாடங்களை கற்று அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் நன்மைகளை கருத்தில் கொண்டு புதிதாக அமைக்கப்படப்போகும் இது போன்ற இறால் பண்ணைகளுக்கு அனுமதிகளை வழங்க வேண்டும் என்பதே மட்டக்களப்பு புத்திஜீவிகளின் கோரிக்கையாக அமைந்துள்ளது.இது குறித்து வாகரை மீனவர் சங்க தலைவர்களும் பொதுமக்களும் பின்வருமாறு கருத்து தெரிவித்தனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 வாவிகள் காணப்படுகின்றது. இலங்கையில் களப்பு கூடிய மாவட்டகளில் மட்டக்களப்பு இரண்டாம் பிடிக்கின்றது.இது இப்படி இருக்க இன்று வாகரை வாவி இயற்கை வளங்களை அதிகமாக கொண்டு காணப்படுகின்றது.இந்த வருட தொடக்கத்தில் நெக்டா நீரியல் துறை அமைப்புடன் இணைந்து மாவட்ட செயலகம் வாகரை பனிச்சங்கேணியை மையமாக கொண்டு சூழலியல் பூங்கா அமைக்க முயற்சிகள் மேற்கொள்ப்படுவதாக அறிந்தோம்.இதற்கு 03 தடவை பலத்த எதிப்பினை மக்களாகிய நாங்கள் வெளிக்காட்டியமை யாவரும் அறிந்ததேயாகும்.எனினும் இன்று 2016.05.20 மட்டக்கப்பு மாவட்ட செயலகத்தில் வாகரையில் சூழலியல் பூங்கா என்ற பெயரில் இறால்பண்ணை அமைப்பது தொடர்பாக கிழக்கு மாகாண அரச அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள்,மேலும் வாகரை நன்னீர் மீன்பிடி அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.இதில் அதிகாரிகள், இத்திட்டம் அபிவிருத்தி சார்ந்தது. எனவே இதனை எவ்வாறாயினும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றனர்.இதில் வாகரை நன்னீர் சங்க பிரதிநிகளுக்கும் அதிகாரிகளுக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு வெளி நடப்பு செய்திருந்தோம்.அத்துடன் அதிகாரிகளுடன் பின்வரும் கேள்விகளையும் முன்வைக்கின்றோம் என்றனர்.1.மட்டக்களப்பில் இறால் பண்ணை மேற்கொள்ளப்பட்ட இடங்கள் பாலை வனங்கள் ஆக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் என்ன? (கொக்கடிச்சோலை,திருப்பெருந்துறை,)2.புத்தளம் மாவட்டத்தில் நன்னீர் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதற்கு காரணம் என்ன?3.இயற்கையான மீன், நண்டு வகை இன்று புத்தளத்தில் பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கு காரணம் என்ன?
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila