வடமாகாண சபையின் தீர்வுதிட்ட யோசனை சம்பந்தரிடம் கையளிப்பு
வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பிற்கான தீர்வுதிட்டம் குறித்த யோசனைகள் அடங்கிய, திட்டவரைபு இன்று (சனிக்கிழமை) எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் வாசஸ்தலத்தில் வைத்து இன்று மாலை 5.30 மணியளவில் இந்த தீர்வுத்திட்ட யோசனை கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமாகா முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா உள்ளிட்ட வடமாகாணசபை உறுப்பினாக்ள் சிலர் ஒன்றிணைந்து இந்த திட்டத்தினை இரா.சம்பந்தரிடம் கையளித்துள்ளனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); var switchTo5x=true; stLight.options({publisher: "d16d3d9f-416d-4d52-81b2-11f0550f9947", doNotHash: false, doNotCopy: false, hashAddressBar: false}); Tags: CV Vikkenasvaranhandovernew constitution
Add Comments