இலங்கையின் அரசியல் அமைப்புக்காக, வடக்கு மாகாணசபையினால் தயாரிக்கப்பட்ட முன்மொழிவுகள் இன்று எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டன.எதிர்க்கட்சி தலைவரின் கொழும்பு வாசஸ்தலத்தில் வைத்து இந்த முன்மொழிவுகள் இன்று மாலை 5.30 மணியளவில் வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், அவை தலைவர் சீ.வீ.கே சிவஞானம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராஜா ஆகியோரால் சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டன. இந்தநிகழ்வில் வடக்கு மாகாணசபையின் 10 உறுப்பினர்களும் பங்கேற்றனர்.இதன்போது தமது முன்மொழிவுகளில் அடங்கியுள்ள விடயங்களை வடக்கு மாகாணசபை தரப்பினர் சம்பந்தனிடம் விளக்கினர்.இதனையடுத்து கருத்துரைத்த சம்பந்தன், வடக்கு கிழக்கு இணைந்த மாகாணம் என்று கோட்பாடு உண்மையான இந்திய - இலங்கை உடன்படிக்கையில் இருந்த போதும் பின்னர் இல்லாது செய்யப்பட்டது. எனினும் வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்போது இந்தவிடயம் முக்கியமானதாகும்.எனவே இந்தக் கோட்பாட்டை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக குறிப்பிட்டார் என்று வடமாகாண சபை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாணசபையின் முன்மொழிவுகள் எதிர்க்கட்சி தலைவரிடம் கையளிப்பு

Related Post:
Add Comments