கிழக்கில் வீட்டுத் திட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்ற மக்களுக்கு இரும்புக் கூடுகளை கொடுத்து வசிக்கச் சொல்வது சரி அல்ல என தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவரும் த.தே. கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன், இத் திட்டத்தை மாற்றியமைத்து முறையான வீட்டுத் திட்டம் வழங்கப்பட வேண்டும் என மீள்குடியேற்ற அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.
யுத்தத்தினால் பாதிக்கபட்ட வடக்கு - கிழக்கு மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நாடாளும ன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதமொன்றில் உரையாற்றிய போதே சம்பந்தன் இதனைத் தெரிவித்துள் ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரை யாற்றுகையில்,
65ஆயிரம் வீடுகள் சம்பந்தமாக ஒரு பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. மக்கள் இந்த வீடுகளை விரும்ப வில்லை மக்களுக்கு தேவையானது வீடு இரும்புக் கூடு அல்ல. ஆகவே இந்த விடயம் சம்மந்தமாக நாங்கள் ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும். ஏனென்றால் மக்களுக்கு உகந்த வீடு அமைத்து கொடுக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. இந்த விடயத்தை அசமந்தமாக எடுக்காமல் பொருத்து வீட்டுத் திட்டத்தை மாற்றியமைப்பதில் அக்கறை காட்டவேண்டும் இதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி எம் சுவாமிநாதனுடைய ஒத்துழைப்பும் தேவை என சம்பந்தன் தனது உரையில் குறிப்பிட் டார்.
இதற்கு பதிலளித்த மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் தொடர்பான அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்,
யுத்தத்தினால் வீடுகளை இழந்த வட கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களுக்காக கட்டப்படவுள்ள 65 ஆயிரம் பொருத்து வீடுகளை பெற்றுக் கொள்வதற்கு 90 ஆயிரம் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.
எனவே கட்டப்படும் வீடுகள் தரம் குறைவாக இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக தெரிவித்த அமைச்சர் சுவாமிநாதன், பேராதனை பல்கலை க்கழகத்தின் தொழில்நுட்ப ஆலோசனை களுக்கு ஏற்ப வீடுகள் கட்டப்படுவதாக தெரிவித்தார்.
அதேபோன்று இவ்வாறு கட்டப்படும் வீடுகளில் பொது மக்களுக்கு தேவையான எல்லா வசதிகளும் உள்ளடக்கப்படும் என்றும் கூறினார்.மேலும் யுத்தத்தினால் சேதமடைந்த 2 ஆயிரத்து 400 வீடுகளை புனரமைக்க 480 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இதன்படி ஒரு குடும்பத் திற்கு ஒரு லட்சம் ரூபா வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்