கர்நாடக மாநிலம் பீதாரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போல் ஒருவர் வாழ்ந்ததாக கூறப்படுகின்ற நிலையில், அவரது உறவினர்களிடம் மரபணு (DNA) பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிப்பட்டுள்ளது.
பீதார் மாவட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவத்தில் லால்தாரலி முத்தையா என்று அழைக்கப்பட்ட ஒருவர் வாழ்ந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 1990ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த இவர் 2001ஆம் ஆண்டு இறந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இதன்பேரில் அவர் வாழ்ந்த வீட்டை பரிசோதனை செய்த அதிகாரிகள், பூட்டப்பட்டிருந்த அறையில் இராணுவ உடைகள், தொலைநோக்கி மற்றும் ஜெர்மன் கடிகாரம் போன்ற பழங்கால பொருட்கள் கண்டெடுத்துள்ளனர்.
இதனையடுத்து, நாடாளுமன்ற கட்டிட வடிவத்தில் கட்டப்பட்டிருந்த அந்த வீடு முழுவதும் சுபாஷ் சந்திர போஸ் உருவம் கொண்ட படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாகவும், கூறப்படுகின்றது.
எனவே உயிரிழந்த முத்தையாவின் உடல் வீட்டின் அருகிலேயே புதைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்ற நிலையில், இதனை உறுதி செய்ய அவரது உறவினர்களிடம் மரபணு சோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்துள்ளனர்.இதற்காக அவரது பேரன் மரபணு பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.