இந்தியப் பெருங்கடலூடாகப் பயணம் செய்த கப்பல் இதுவரை கொழும்புத்துறைமுகத்தில் அல்லது சிங்கப்பூர் துறைமுகத்திலேயே எரிபொருளை நிரப்பி வந்தன. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்தியா சென்னைத் துறைமுகத்தில் தனது எரிபொருள் நிரப்பும் சேவையை ஆரம்பித்துள்ளது.
சென்னைத் துறைமுகத்திலிருந்து ஐந்து கடல் மைல் தொலைவில் மிதவைப் படகுகள் மூலம் கப்பல்களுக்கு எரிபொருள் நிரம்பும் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்தியா புதிய வாய்ப்புக்களை உருவாக்கியதுடன், சர்வதேச கடற்போக்குவரத்துப் பாதையிலேயே (சென்னைத் துறைமுகத்துக்குள் செல்லாமல்) தமக்குரிய எண்ணெய் நிரப்பும் வசதியைப் பெற்றுக்கொள்வதால் கப்பல்களுக்கான செலவீனங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் துறைமுகத்துக்குள் நுழைய செலுத்தவேண்டிய கட்டணங்கள், தரித்து நிற்பதற்கான கட்டணங்கள் போன்ற கட்ணங்கள் ஒன்றுமே கட்டாமல் எரிபொருளை நிரப்பக்கூடியதாகவும், நேரத்தை மிச்சப்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.
இந்திய அரசின் இச்செயலினால், இந்தியக் கடற்பரப்பில் பயணம் செய்யும் அனைத்துக் கப்பல்களும் சென்னைத் துறைமுகத்துக்கு திசைதிருப்பப்படுவதால், கொழும்புத் துறைமுகத்தின் வருவாயும் முக்கியத்துவமும் பாதிக்கப்படும் எனத் தெரியவருகின்றது.