கடந்த சனிக்கிழமை இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் கரைதட்டிய படகினை இன்று சர்வதேச கடற்பரப்புக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கையில் இந்தோனேசிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
படகுக்குத் தேவையான எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்களை ஏற்றி இயந்திரத்தை இயக்கவைத்து இந்தியா நோக்கி அனுப்பிவைப்பதற்கு இந்தோனேசியா முடிவெடுத்துள்ளது.
இன்று படகில் இருந்தவர்களுக்கான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு, ஒவ்வொருவரும் தனித்தனியாகப் படம்பிடிக்கப்பட்டனர்.
இந்தோனேசியாவின் கடற்படைக் கப்பலொன்று அகதிகள் படகை பாதுகாப்பாக இந்தியாவுக்கு கொண்டுசெல்லவுள்ளது. இதற்காக இந்தோனேசியக் கப்பலொன்று அப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு பயணிப்பது சாத்தியமில்லையெனவும், அவர்களைப் பாதுகாப்பாக இந்தியா திரும்புமாறும் தெரிவித்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று இந்தப் படகை சர்வதேச கடற்பரப்புக்கு இழுத்துச் செல்லும் இறுதிக்கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.