யாழ். ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
இது பற்றி மேலும் தெரிவித்த அவர் வடகிழக்கு இணைப்பு என்பது ஏற்கனவே அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட்ட விடயம். அதே போன்று தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை கூட தனது இடைக்கால அறிக்கையில் குழுவின் அறிக்கை ஏற்றுக்கொள்ளவில்லை.
அவ்வாறாயின் கூட்டமைப்பின் சார்பில் நியமிக்கப்பட்டதாக கூறப்படும் குழுவில் இருந்த சட்டத்தரணி செல்வகுமாரன் மற்றும் சந்திரகாசனின் மகன் போன்றோர் அங்கு என்ன செய்தனரெனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
உண்மையில் தமிழ் மக்களது எதிர்பார்ப்பாக உள்ள சமஸ்டி பற்றி பேசக்கூட இந்த குழு தயாராகவிருக்கவில்லை. தமிழ் மக்கள் சிறுபான்மையினம். இந்த இனம் பெரும்பான்மையினம் தருவதை வாங்கிக்கொண்டு பேசாதிருக்கவேண்டுமெனவே எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த குழுக்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் நற்சான்றிதழ் வழங்கவே ஜநா கூட்டத்தொடருக்கு சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் போகப்போகின்றார்களென அவர் கேள்வியும் எழுப்பியிருந்தார்.