
கிளிநொச்சி மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின்
வேட்பாளர்கள் முதலமைச்சரின் படத்தை பாவிப்பதை நிறுத்துமாறு முதலமைச்சர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். சிறிதரன் எம்.பிக்கு இன்று அனுப்பியுள்ள இரகசிய கடிதத்தில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
முதலமைச்சர் விக்னேஸ்வரனிற்கு எதிராக செயற்பட்டு வரும் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனும், அங்குள்ள தமிழரசுக்கட்சி பிரதானிகளும், இந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் முதலமைச்சரின் படத்தை பாவித்து வருகிறார்கள் இதுகுறித்து தமிழ் கிங்டொம் முகநூலிலும் பிரஸ்தாபித்திருந்தோம்.

இந்தநிலையில் இன்று முதலமைச்சரின் செயலாளர், சிறிதரன் எம்.பிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அதில், உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி வேட்பாளர்கள் முதலமைச்சரின் படத்தை பாவிக்கிறார்கள், அதை உடனடியாக நிறுத்துங்கள் என கேட்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சு வட்டாரங்களிலிருந்து அறியவந்துள்ளது.

