“எனது மகனை கைது செய்து, சிறையில் அடைத்தால் எனது அரசியல் பயணத்தை தடுக்கலாம் என பலர் நினைக்கின்றனர். அவ்வாறு நினைத்தால் அது கானல் நீராகிப் போய்விடும்.
இந்த நாட்டு மக்கள் இருக்கும் வரை, என்னுடைய குடும்பத்தையே சிறையில் அடைத்தாலும் என்னுடைய அரசியல் வாழ்க்கை தொடரும்” என மகிந்த அவரது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
70 மில்லியன் மோசடி தொடர்பில் நிதி குற்றபுலனாய்வு பிரிவினரால் நாமல் ராஜபக்ஸ இன்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.