இந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைவாக இந்த மீள்குடியேற்றச் செயலணி நான்கு இணைத்தலைவர்களைக் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, துமிந்த திசநாயக்க மற்றும் டி.எம்.சுவாமிநாதன் ஆகிய நான்கு அமைச்சர்கள் இணைத்தலைவர்களாக பணியாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த மீள்குடியேற்ற நடவடிக்கை குறித்து வடக்கு மாகாணசபையுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். தற்போது இந்தச் செயலணி விரிவாக்கப்பட்டுள்ள போதிலும், வடக்கு மாகாணசபைக்கு இதில் இடமளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |
வடக்கு மீள்குடியேற்றச் செயலணிக்கு இணைத்தலைமை - வடக்கு மாகாணசபைக்கு இடமில்லை!
Related Post:
Add Comments