இதன்படி, பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைய வேண்டும் என்ற முடிவை வவுனியாமாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவே எடுக்கவேண்டும் என்றும், அந்த முடிவையே மத்தியஅரசு ஏற்கும் என்றும் ஜனாதிபதி திட்டவட்டமாக இடித்துரைத்துள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இந்தத் தகவலைஉறுதிப்படுத்தினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தரப்பு உட்பட ஏனையஅனைவரும் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இதுபற்றி கலந்துரையாடி ஏகமனதாகஎடுக்கும் முடிவை அரசு அங்கீகரிக்கும்.
ஜனாதிபதியின் நிலைப்பாடு இதுவாகத்தான்இருக்கின்றது என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி எதிர்வரும் 17ம்திகதி நாடு திரும்புவார்.
அதன்பின்னர் வவுனியா பொருளாதாரமத்திய நிலைய விவகாரம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தவுள்ளார்.
இதற்கிடையில்ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை கூட்டுவதற்குரிய நடவடிக்கையும்இடம்பெற்றுள்ளது.
வடக்குக்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதற்கு 2010ம்ஆண்டு நடைபெற்ற அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
எனினும், விடயதானத்துக்கு பொறுப்பான கிராமிய பொருளாதார விவகார அமைச்சு இந்தஇடத்தை விரும்பவில்லை.
அதாவது, வவுனியா நகரிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்துக்குள்ளேயே அதுஅமைய வேண்டும் என்பதே அமைச்சின் நிலைப்பாடாகும்.
ஆனால், வடக்கு மாகாண சபைமுதல்வர் உட்பட கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் 12 கிலோ மீற்றர்தூரமுள்ள ஓமந்தையை முன்மொழிந்துள்ளனர்.
அத்துடன், கூட்டமைப்பின் ஏனையஉறுப்பினர்கள் சிலர் தாண்டிக்குளத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வருகின்றனர்.
இதனால், இவ்விடயத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்தே ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன தலையிட்டுள்ளார்.