இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற வட மாகாணசபை அமர்விலேயே சிவாஜிங்கம் இதனைத் தெரிவித்தார். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், வெறுமனே குழுவை அமைத்து ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறோம் என்ற எண்ணப்பாடு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் குறித்த குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற வட மாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளையும் கவனத்திற்கொள்ள வேண்டுமென சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார். மேலும், விசாரணைக் குழுவின் அறிக்கையையும் அவையில் சமர்ப்பிக்க வேண்டுமென சிவாஜிங்கம் கேட்டுக்கொண்டார்.
இவற்றிற்கு பதிலளித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், விசாரணைகள் வெளிப்படையாகவே முன்னெடுக்கப்படும் என்ற ரீதியில் விசாரணைக் குழுவால் முன்வைக்கப்படும் யோசனைகள் அல்லது தீர்மானங்கள் அனைத்தையும் சபையில் முன்வைப்பதாக தெரிவித்தார். அத்தோடு, மாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதியின் கருத்துக்களும் உள்வாங்கப்படுமென மேலும் தெரிவித்தார்.