யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் அமைச்சர்களிற்கான தரகர் வேலையில் விஜயகலா மகேஸ்வரனும் அவரது கும்பலும் முழு அளிவில் குதித்துள்ளன. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம வந்திருந்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று சனிக்கிழமை கோணப்புலம் அகதிகள் முகாமுக்கு சென்று அங்குள்ள மக்களுடன் பேசியிருந்தார். அதன்போதே அவருடன் ஒட்டியதாக விஜயகலா மகேஸ்வரனும் அவரது கும்பலும் இணைந்திருந்தது.
இந்நிலையில் முகாம் மக்களை பேசவிடாது தடுத்த விஜயகலா மற்றும் அவரது ஆதவாளர்கள் முகாம் மக்கள் கூறியதை திரிபுபடுத்தி கருத்துக்களினை வெளியிட்டதாகவும் கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் சத்தமின்றி டக்ளஸ் மற்றும் ஈபிடிபி கும்பல் செய்த அதே கட்டைப்பஞ்சாயத்துக்களில் தற்போது விஜயகலா மற்றும் அவரது அணி மும்முரமாக ஈடுபட்டிருப்பதாக யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே மஹிந்த ஆட்சி காலத்திலும் மஹிந்தவின் செல்லப்பிள்ளையாக விஜயகலா மகேஸ்வரன் இருந்திருந்தார். அத்துடன் யாழ்.வரும் மஹிந்த அமைச்சரவையை சேர்ந்த அமைச்சர்கள் விஜயகலா வீட்டில் விருந்துகளில் பங்கெடுப்பதும் வழமையாகும்.
தற்போது விஜயகலா தற்போதைய அரசின் பிரதி அமைச்சராகிவிட்ட நிலையில் விருந்து கொண்டாட்டங்களிற்கு குறைவில்லாதுள்ளது.
எனினும் தற்போது மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் தரப்பினைத் தாண்டி நேரடியாகத் தரகர் வேலையில் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அவரது கும்பல் தமிழ் மக்களது அடிப்படை பிரச்சினைகளிலும் களமிறங்கியிருக்கின்றது.
நல்லாட்சி அரசிலும் தமிழர் தயாகத்தில் சூழல் வேகமாக திரும்பிவரும் நிலையில் ஜக்கிய தேசியக்கட்சி சார்பு விஜயகலா மற்றும் அவரது சகபாடிகளது நகர்வுகள் சந்தேகத்தைத் தோற்றுவிப்பதாக உள்ளது