மகிந்த ராஜபக்ச அடிக்கடி வெளிநாடு செல்வதன் இரகசியம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வதன் இரகசியம் அம்பலமாகியுள்ளது.
மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது பரிவாரங்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை சந்திக்க போவதாக கூறி, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட போதிலும் அவர்களின் நோக்கம் அதுவல்ல என கூறப்படுகிறது.
இவர்கள் வெளிநாடுகளில் இரகசியமான முறையில் முதலீடு செய்துள்ள பணத்தில் இருந்து கிடைக்கும் இலாபத்தை பெற்றுக்கொள்ளவே இப்படி அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணிப்பதாக தெரியவந்துள்ளது.
ஜப்பானுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருந்த மகிந்த ராஜபக்ச பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்போது 500 மில்லியன் ரூபாவை எடுத்து வந்தார்.
அத்துடன் தென் கொரியாவுக்கு பயணம் செய்து திரும்பிய அவர், 400 மில்லியன் ரூபாவை இலங்கைக்கு எடுத்து வந்தார். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்த பணத்தை அன்பளிப்பாக கொடுத்ததாக மகிந்த தரப்பினர் கூறி வருகின்றனர்.
எது எப்படி இருந்த போதிலும் வெளிநாடுகளில் தொழில் புரிந்து வரும் இலங்கை தொழிலாளர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு மில்லியன் கணக்கில் அன்பளிப்பு செய்யக் கூடிய வசதிகளையோ வருமானத்தை கொண்டவர்கள் அல்ல.
தென் கொரியா போன்ற நாடுகளில் மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கும் இலங்கை தொழிலாளர்கள் ஒரு டொலர் பணத்தை செலவப்பதற்கு பத்து முறை யோசிப்பவர்கள்.
அப்படியான நிலையில் அவர்களால் எப்படி மகிந்த ராஜபக்சவுக்கு 400 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்க முடியும் என அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ராஜபக்சவினர் தமது ஒரு தசாப்த கால ஆட்சியின் போது மோசடி செய்த பொதுமக்களின் பல கோடி ரூபா பணத்தை வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் வைப்புச் செய்துள்ளனர்.
அத்துடன் நண்பர்களான வேறு வர்த்தகர்களின் பெயர்களில் பல்வேறு முதலீடுகளை செய்துள்ளனர். தாய் நாட்டுக்கு திரும்ப முடியாத நிலையில் இருக்கும் தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷின் சினவத்ரா, மகிந்த ராஜபக்சவின் இப்படியான நண்பர்களில் ஒருவராவார்.
கறுப்பு பண முதலீடு தொடர்பாக உலகத்திற்கு தெரியவராத இரகசிய உடன்பாடுகள் இவர்கள் இடையில் உள்ளன. இதனடிப்படையில், முதலீடுகளில் கிடைக்கும் இலாபம் பங்கிடப்படுகின்றன.
மகிந்த ராஜபக்ச வெளிநாடுளுக்கு சென்று இந்த இலாப பணத்தையே இலங்கைக்கு எடுத்து வருகிறார். மகிந்த ராஜபக்ச செல்லும் நாடுகளுக்கு அவரது உறவினரான உதயங்க வீரதுங்கவும் செல்வது வழக்கம், பணத்தை பரிமாற்றம் செய்யவே அவர் மகிந்த செல்லும் நாடுகளுக்கு வருவதாக கூறப்படுகிறது.
சர்வதேச பொலிஸாரின் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக உதயங்க இம்முறை தென் கொரியாவுக்கு விஜயம் செய்யவில்லை என பேசப்படுகிறது.
மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அரச தலைவர் என்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி கறுப்பு பணத்தை தன்னுடன் எடுத்து வருவது இலகுவாக காரியமாக இருந்து வருகிறது.
இதனிடையே மகிந்த ராஜபக்ச அடுத்ததாக இத்தாலி நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். சுவிஸ் வங்கிகளை போல் கணக்கு இரகசியங்களை பேணி பாதுகாத்து வரும் வங்கிகள் இத்தாலியின் சென் மரினோவில் அமைந்துள்ளன.
2013ஆம் ஆண்டு கோத்தபாய ராஜபக்ச அங்கு சென்றிருந்தார். மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் கவிழ்ந்த பின்னர், அவரது புதல்வர் யோஷித்த ராஜபக்சவும் சென் மரினோவுக்கு சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila