ஐ.நா பொதுச்செயலாளரின் கவனத்தினை ஈர்க்கும் வகையில், வடக்கு பகுதியில் உள்ள மக்கள் மாபெரும் போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்திருந்தனர்.
யாழ்.பொது நூகலத்தின் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மீள்குடியேற்றம், சர்வதேச விசாரணை, அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த மக்கள், மீள்குடியேற்றப்பட வேண்டிய மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஐ.நா செயலாளர் தமது வேண்டுகோளை ஏற்று தம்மை சந்திப்பார் என மக்கள் எதிர்ப்பார்த்திருந்தனர்.
எனினும், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மக்களை சந்திக்க வந்த போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆக்ரோஷப்பட்டனர்.
இதனையடுத்து, குறித்த இடத்திலிருந்து இரா.சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பினர் வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
You may like this video