மறுபுறத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், சந்திரிக்கா அம்மையாரும் வரலாற்று வெற்றியினைப் பங்குபோட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கை அரசியல் வரலாற்றில் அவர்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்றால் இந்த தேசிய அரசாங்கத்தின் ஆட்சி என்று அரசியல் ஆய்வாளர்கள் அதிகம் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
நேற்றைய தினம் குருநாகல் மாளிகா மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றிருக்கின்றது.
இதில், மைத்திரிபால சிறிசேன எதிர் பார்த்திருக்காத ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. மகிந்த ராஜபக்சவிற்குமானது தான். ஏனெனில் நேற்றைய தினம் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு 5லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவினை தெரிவித்திருக்கின்றார்கள்.
கடந்த மே மாதம் நடைபெற்ற மேதினக் பொதுக் கூட்டத்தின் போது கலந்து கொண்ட மக்கள் தொகையை விடவும் இது பன்மடங்கு தொகை எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சுமார் 2800 பேருந்துகளில் பொதுமக்கள் வந்து கலந்து கொண்டிருக்கின்றார்கள். மலேசியாவில் இருந்து இந்த செய்தியைக் கேட்ட மகிந்த ராஜபக்ச ஆடிப்போயிருந்தார் என்றும் கொழும்பில் இருந்து தகவல்கள் கசிந்திருக்கின்றன.
ஆட்சி அதிகாரங்களை இழந்ததன் பின்னர் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்த அதேவேளை, மக்கள் எல்லோருமே தன்பக்கம் என்று கூறிக்கொண்டிருந்தார்.
அதிலும் கிராமப்புரங்களில் இருக்கும் பொது மக்கள் தனக்கான ஆதரவினை இன்றளவும் வழங்கி வருகின்றார்கள் என்று அவர் அதிகளவில் நம்பியிருக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டிற்கு வருகை தந்திருந்தவர்கள் குறிப்பாக கிராமப்புரத்தில் வசிக்கும் மக்கள் என்கிறார்கள் அவதானிகள்.
இது தான் மகிந்த ராஜபக்சவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி. அதிலும், மகிந்த ராஜபக்ச, அதிகாரக் கனவில் இருக்க, மக்கள் அவரை மெல்ல ஓரம் கட்டிவருகின்றார்கள் என்னும் கசப்பான செய்தி அவரை வாட்டவே செய்யும் என்பதில் ஐயமில்லை.
இந்நிலையில் மலேசியாவிற்கான அவரின் பயணத்திற்கு மலேசியத் தமிழ் மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுவருகின்றார்கள்.
இதுவொருபுறமிருக்க, இலங்கையில் இருந்து தப்பியோடியிருக்கிறார் மகிந்த என்று கிண்டலாக இப்பொழுது பேசப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் என்ற ரீதியில் மகிந்த ராஜபக்ச 65வது மாநாட்டிற்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர் அதனைத் தவிர்த்துக் கொள்வதற்காகவே மலேசியப் பயணத்தை திடீரென்று ஏற்பாடு செய்திருக்கின்றார்.
இது அவர் தான் சார்ந்தவர்கள் மீது கொண்ட அவநம்பிக்கையின் வெளிப்பாடு. ஏனெனில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டை தனித்து நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் தனித்து நடத்தினால் அது சாத்தியமாகுமா? மக்கள் அதிகளவில் வருகை தருவார்களா? போன்றனவற்றை மகிந்த எண்ணிப் பார்த்ததன் விளைவு தான் அவரின் வெளிநாட்டுப் பயணம்.
தவிரவும், மகிந்த ராஜபக்சவிற்கு இன்னொரு அதிர்ச்சிகரமான தகவலும் ஒன்று உண்டு, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை இப்பொழுது எதிர்த்துப் பேசுபவர்கள் முக்கியமான அரசியல் தலைவர்களில் இருவர் தான் உள்ளனர்.
விமல் வீரவங்ச, மற்றும் உதய கம்பன்பில ஆகியோர் மட்டும் மகிந்தவிற்கு ஆதரவாகவும், மைத்திரிக்கு எதிராகவும் குரல் கொடுக்கின்றார்கள். ஆனால் ஏனைய கூட்டு எதிர்க் கட்சியினர் இந்த விடையத்தில் அடக்கி வாசித்துவருவதானது எதிர்காலத்தில் இவர்களும் மைத்திரி பக்கம் தாவலாம் என்ற ஒரு கருத்தை உருவாக்கியிருக்கிறது.
கூட்டு எதிர்க் கட்சியினரை நம்பி தன்னுடைய அரசியல் காய் நகர்வுகளை முன்னெடுத்து வந்த மகிந்த ராஜபக்ச தற்பொழுது அவர்கள் மீதும் நம்பிக்கையிழந்து, அடுத்தகட்ட அரசியல் காய் நகர்த்தல்கள் தொடர்பில் ஆராய்த் தொடங்கியிருக்கிறார்.
ஆனால், மைத்திரி மகிந்த தலைமையிலான அரசாங்கத்திற்கு பெருகி வரும் ஆதரவினை இனிவரும் காலங்களில் மகிந்தவால் முறியடிக்கமுடியாத அளவிற்கு நிலைமை மகிந்தவின் கைமீறிப் போய்விட்டது.
இதுவேளை, மைத்திரி ரணில் அரசாங்கம் சர்வதேச ரீதியாக பெற்றுவரும் வெற்றியின் விளைவும், அதனூடக அரசாங்கம் ஈட்டும் வெற்றியும் இனியொரு மகிந்த ஆட்சியை நினைத்தும் கூட பார்க்க முடியாது.
மகிந்த ராஜபக்ச எதிர்த்த எல்லாக் கதவுகளும் மெல்ல மெல்ல அடைக்கப்பட்டு வருகின்றன. இனி அவர் வேறு மார்க்கங்களை தேடுவதை விடுத்து, ஒன்றில் மைத்திரியோடு ஒன்றாக வேண்டும். இல்லையெனில் அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெறவேண்டும். இருக்கும் கொஞ்ச மரியாதையேனும் காக்கப்படும்.