அண்மையில் சிறீலங்கா அரசினால் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் நியமனம் தொடர்பாக கல்வியமைச்சர் இராதாகிருஷ்ணன் கவலை வெளியிட்டுள்ளார்.
மத்திய கல்வி அமைச்சினால் நாடு தழுவிய ரீதியில் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின்மூலம் 1038 பேருக்கு விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.
இதில் 10 வீதம் அதாவது 108 தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் மொழி மூல பள்ளிக் கூடங்களில் கனிசமான வெற்றிடங்கள் இருந்தும் இந் நியமனத்தின் போது அது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தத் தவறிவிட்டதாக கல்வி இராஜங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நியமனம் வழங்கும் நிகழ்வின்போது தான் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடமும் அமைச்சு அதிகாரிகளிடமும் தனது ஆதங்கத்தை தான் வெளிப்படுத்தியபோது, தமிழ் மொழி மூல வெற்றிடங்களை நிரப்புவதற்கு பௌதீகம் மற்றும் இரசாயனம் என பாட ரீதியான தகுதியை தமிழ் ஆசிரியர்கள் பெற்றிருக்கவில்லையென கல்வியமைச்சர் தன்னிடம் தெரிவித்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதற்காக தமிழ்மொழிமூல விஞ்ஞான மற்றும் கணித பட்டதாரி ஆசிரியர் பற்றாக்குறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாதெனவும், குறித்த பிரச்சனையை நிவர்த்திசெய்வது தொடர்பாக பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவிடம் தான் வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.