தமிழ் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதன் மூலமே நிலைத்த நல்லிணக்கத்தை அடைய முடியும் என சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பான ஐ.நா. விசேட அறிக்கையாளர் ரீட்டா இசாக் நாடி யாவிடம் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கு.குருகுலராஜா மற்றும் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகிய இருவரும் கூறியுள்ளனர்.
இலங்கைக்கு பத்து நாட்கள் பயணமாக வருகை தந்துள்ள சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பான ஐ.நா.விசேட அறிக்கையாளர் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்து பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தார். இந்த சந்திப்புக்களில் ஒன்றாக நேற்றைய தினம் பிற்பகல் இரண்டு மணியளவில் வடக்கு முதலமைச்சரினை சந்திப்பதும் ஏற்பாடாகியிருந்தது.
எனினும் வடக்கு மாகாண முதலமைச் சர் சி.வி.விக்னேஸ்வரன், இலண்டன் பயணமாவதற்காக கொழும்பு சென்றுள்ளதால் அவரது சார்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், கல்வி அமைச்சர் கு.குருகுலராஜா ஆகியோர் சந்தித்திருந்தனர். இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். 45 நிமிடங்கள் வரை நீடித்த மேற்குறித்த சந்திப்பு தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்;,
எமது நாட்டிலே சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் விடயங்களை விரிவாக அவர் கேட்டிருந்தார். காணாமல்போனோர் மற்றும் நீண்டகாலமாக சிறையில் உள்ள அரசியல் கைதிகள் ஆகியோரது விடயங் கள், தமிழ் மக்களுடைய காணிகளை இராணுவம் வைத்திருப்பதை பற்றியும் பொருளாதார விடயங்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தோம்.
அவர் இந்த விடயங்களை அறிந்து இலங்கையில் சிறுபான்மை மக்கள் மீது நடக்கும் அடக்குமுறைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணைக்குழுவுக்கு அறிக்கையிடுவதாக கூறியிருந்தார். அந்த அறிக்கையில் உள்ளடக்கப்படும் விடயங்களை எமக்கும் அனுப்பி வைக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் இதற்கூடாக நல்லிணக்கத்திற்கு வரலாமா? என அவர் கேட்டிருந்தார்.
நல்லிணக்கம் சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டுமா னால் எமது மக்களின் பிரச்சினைகள் முதலில் தீர்க்கப்பட வேண்டும். பிரதானமாக காணாமல் போனோர் தொடர்பில் உண்மையான நிலைப்பாடுகள் வெளிப்படுத்த வேண்டும். சிறையில் இருக்கும் அரசி யல் கைதிகள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தோம் என வடக்கு அமைச்சர்கள் மேலும் தெரிவித்தனர்.