
இன்று முல்லைத்தீவு முள்ளியவளைப்பகுதியில் பகுதியில் மாகாணசபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் மாரடைப்பினால் சாவடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஓடிச் சென்றுகொண்டிருந்தபோது மாரடைப்பினால் விழுந்துள்ளார். அதன் பின்னர் சாவடைந்துள்ளார்.
தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளராகவும் வடமாகாண சபை உறுப்பினராகவும் வட மாகாணசபை பிரதி அவைத்தலைவராகவும்
செயற்பட்டுவந்தவர்.
அண்மையில் தமிழரசுகட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஆவேசமடைந்து சம்பந்தன் மீது ஒலிவாங்கியை எறிந்ததாக பரபரப்பான தகவல் வெளிவந்திருந்தது.