*புதிய அரசியலமைப்பு * எழுக தமிழ் * சர்வதேச விசாரணை முடிவுற்றது (முன்னுக்குப் பின்னாக சுமந்திரன் பேச்சு)


புதிய அரசியலமைப்பை வரவிடாது தடுப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது எம்மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.எமது நிலைப்பாடே எழுக தமிழ் பிரகடனத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அதைவிட எமது இலக்கு சரியானதாகத்தான் இருக்கின்றது என தெரிவித்த த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், 

சர்வதேச விசாரணை முடிவுறறதை யாரும் மறுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசுவின் \\\\\\\'இலங்கை அரசியல் யாப்பு” நூல் வெளியீடும் ஆய்வரங்கமும் நேற்றைய தினம் யாழ் சரஸ்வதி மண்டபத்தில் இடம் பெற்றது. அதில் கலந்து கொண்டு சிறப்புரை அற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 
இந்த நாட்டில்  தமிழ் மக்களுடைய சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வட-கிழக்குக்கு வழங்கப்பட வேண்டும் என எமது எல்லா தேர்தல் அறிக்கையிலும் தெளிவாக இருக்கி றது. 

அண்மையில் வெளியிடப்பட்ட எழுக தமிழ் பிரகடனத்தில்  தமிழர்களின் சுய நிர்ணய உரிமையையும் அதன்வழி தமிழ்த் தேசத்தின் இறைமையையும் நிறுவன ரீதியாக சமஷ்டி முறைமை ஒன்றின் மூலம் அடைந்து கொள்ளலாம் என நாம் கூறுகிறோம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் நாம்  தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வந்த சமஷ்டி முறையை அவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். ஆனால் பொதுவாக்கெடுப்பு, சர்வஜன வாக்கெடுப்பு, இனப்படுகொலை பற்றி பிரகடனத்தில் எதுவும் குறிப்பிடவில்லை.

ஆனால் நாம் தொடர்ச்சியாக ஒரு  நிலைப் பாட்டை இறுக்கமாக எடுத்து வைத்திருக்கிறோம். நடுநிலையான நிலைப்பாடு. அது கவர்ச்சி இல்லாத நிலைப்பாடாக இருந்திருக்கலாம். ஆனால் மக்களின் பேராதரவு அதற்கு தான் இருந்திருக்கிறது. அதை எதிர்த்து மாற்று தீர்வு வைத்தவர்கள் அதே நிலைப் பாட்டுக்கு வந்துள்ளார்கள். ஆகவே நாங்கள் செல்லுகின்ற வழி, இலக்கு சரியான இலக்காகத்தான்  இருக்க வேண்டும். சர்வதேச சமூகத்தை எம்மோடு சேர்த்துக்கொண்டு நாம் இந்த இலக்கை அடைவோம்.  

சர்வதேச விசாரணை முழுமையாக  முடிவுற்றதை யாரும் மறுக்க முடியாது.கடந்த  செப்ரெம்பர் 16 அந்த அறிக்கை  சமர்ப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து வரும் நடவடிக்கைகள் குறித்து நாம் சில நிலைப்பாட்டை எடுத்தோம். கலப்பு நீதிமன்ற பொறிமுறை வேண்டும் என தெரிவித்தோம். அதற்கு காரணமும் சொன்னோம். 

ரோம் சட்டத்துக்கு இணங்காத இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்த முடியாது. ஆகவே அந்த நீதிமன்ற பொறிமுறை நாட்டில் அமுல்படு த்தப்பட வேண்டும் என்றால் அந்த முறை இலங்கை சட்டத்தில் இடம்பெற வேண்டும்.
இந்த இடத்தில் சில உண்மைகளை தொட்டுக்காட்ட வேண்டிய தேவை உள்ளது. நாங்கள் நிலைப்பாட்டை மாற்றவில்லை ஒரு சிறந்த நிலைப்பாட்டில் நிற்கிறோம். மாற்றுபவர்கள் வேறு ஆட்கள்.

2016ஆம் ஆண்டு தீர்வு என எமது தலைவர் கூறியிருந்தார். அத்தீர்வு வந்து விடுமோ என பயந்து ஓடி ஓடி மாற்று திட்டங்களை சிலர் முன்வைக்கிறார்கள். தற்செயலாக அத் தீர்வு வந்தால் தமக்கு என்ன ஆகும் என்ற சிந்தனையில் அது வரக்கூடாது என சர்வதேச விசாரணை முடிவடைந்த பின்னர்தான் தீர்வு வர வேண்டும் என கூறுமளவு நெருக்கப்பட்டுள்ளார்கள். புதிய அரசியலமைப்பு வரக்கூடாது என்பதற்காக அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila