யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்து வத் துறையின் சர்வதேச ஆய்வு மாநாடும் கண்காட்சியும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
கடுமையான முயற்சியின் பயனாக சித்த மருத்துவக் கண்காட்சியும் சர்வதேச ஆய்வு மாநா டும் நடத்தப்பட்டுள்ளமை பாராட்டுதற்குரியது. ஏகப்பட்ட பொதுமக்களும் மாணவர்களும் கண் காட்சியைப் பார்த்துப் பயன்பெற்றனர்.
சித்த மருத்துவத் துறையை நோக்கி மக் கள் வரத் தொடங்கிவிட்டனர் என்பதற்கு இஃது நல்லதொரு எடுத்துக்காட்டு.
ஆக, சித்த மருத்துவத் துறையை வளர்த் தெடுப்பதிலும் அதன் மிக உயர்ந்த பயனை மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்குமாக பாடு படும் அத்தனை பேருக்கும் இறைவனின் ஆசி நிச்சயம் கிடைக்கும்.
இது ஒரு புறம் இருக்க, சித்தமருத்துவக் கண்காட்சியைப் பார்க்கச் சென்ற நமக்கு எம் இனம் சார்ந்த நினைப்பு கவலை தந்தது என்ப தைக் கூறித்தானாக வேண்டும்.
இதைக்கூறும்போது சித்தமருத்துவக் கண் காட்சியில் ஏதேனும் குறைபாடு என்று யாரும் நினைத்து விடாதீர்கள்.
மாறாக யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவத் துறையில் முஸ்லிம் சகோதரிகள் அதிகளவில் மாணவர்களாக இருப்பதைப் பார்த்தோம்.
சித்த மருத்துவத் துறையைக் கற்பதில் முஸ்லிம் மாணவர்கள் காட்டும் ஆர்வம் கண்டு வியப்படையாமல் இருக்க முடியாது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறை கைதடியில் இயங்குகின்ற போதிலும் மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து முஸ்லிம் பெண் பிள் ளைகள் இங்கு வந்து சித்த மருத்துவத் துறை யைக் கற்று, சித்த மருத்துவப் பட்டதாரிகளாக வெளியேறவுள்ளனர் எனும்போது, சந்தர்ப்ப சூழலை முஸ்லிம் மக்கள் எந்தளவு தூரம் பயன் படுத்திக் கொள்கின்றனர் என்பது புலனாகின்றது.
அதுதவிர, இவ்வாறு வெளியேறுகின்ற முஸ் லிம் சித்த மருத்துவப் பட்டதாரிகள் வடக்கு கிழக்கில் உள்ள சித்த வைத்திய நிலையங் களில் மருத்துவர்களாகக் கடமையாற்றப் போகின்றனர் என்பதும் தெரிந்த விடயம்.
அதேசமயம் நூற்றுக்கணக்கான கிலோ மீற்றர் தூரம் கடந்து வந்து, சித்த மருத்துவத்தை முஸ்லிம் மாணவிகள் கற்கின்றனர் என்பதற் குள்; சித்த மருத்துவத்துக்கு அவர்கள் கொடுக் கின்ற முன்னுரிமை, அதற்கான சமூக கெளர வம், முஸ்லிம் மக்கள் மத்தியில் சித்த மருத்து வத்துக்கான வரவேற்பு, வேலைவாய்ப்பு என ஏகப்பட்ட விடயங்கள் உள்ளடங்கியிருப்பது உணரப்பட வேண்டியது.
இந்த விடயங்களை நினைத்தபோது எங் கள் தமிழ்ப் பிள்ளைகள் சித்த மருத்துவம் என்றால் அதனைக் குறைத்து மதிப்பிடுவது, சித்த மருத்துவமோ படிக்கிறீர்கள் என்று எங்கள் மக்கள் ஏளனக் கேள்வி கேட்பது, சித்த மருத்துவத்தின் பெறுமதியை அறியா திருப்பது என்ற விடயங்களால் எங்கள் பிள் ளைகள் சித்த மருத்துவத் துறைக்கு விண் ணப்பிக்காமல் விட்டுவிடுகின்றனர்.
ஆக, எங்களை நாங்களே தாழ்வுபடுத்திக் கொண்டு - எங்களை நாங்களே குறைத்துக் கொண்டு எல்லாவற்றையும் விட்டுவிலகி நடுத் தெருவில் நிற்க;
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் தமதாக்கிக் கொண்டனர்.
என்ன செய்வது எங்கள் இனம் இதுபற்றி எப்போதுதான் உணரப்போகிறதோ இறைவா!