யுத்தத்தில் உயிர்நீத்த போராளிகள் மற்றும் பொதுமக்களை இந்த கார்த்திகை மாதத்தில் எவ்வித இடையூறும் இன்றி நினைவுகூருவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் வாசிப்பின்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய வன்னி மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தமது உரிமைகளுக்காக 30 வருடங்களாக போராடி உயிர் நீத்தவர்களை நினைவுகூர, கடந்த அரசாங்கம் பல்வேறு தடைகளையும் அடக்கு முறைகளையும் பிரயோகித்தது. உயிர்நீத்த போராளிகளையும் மக்களையும் நினைவுகூர அனுமதிக்கவேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
அத்துடன், யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கான இழப்பீடினைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் உதவி செய்யவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவசக்தி ஆனந்தனின் கோரிக்கையை அடுத்து உரையாற்றிய வஜிர அபேவர்த்தன, அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்பட்டு உயிரிழந்தவர்களை தெற்கில் நினைவுகூரமுடியுமாயின், வடக்கு மக்கள் தொடர்பாகக் கவனம் செலுத்தவேண்டுமெனவும் தெரிவித்தார்.