நெடுங்கேணி ஒலுமடுக் கிராம சேவகர் பிரிவினில் 380 தமிழ் குடும்பங்கள் மட்டுமே வாழும் நிலையில் தமிழ் மொழியே தெரியாத சிங்களக் கிராம சேவகர் நியமிக்கப்பட்டுள்தாக கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கிராம அபுவிருத்துச் சங்க உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,
வவுனியா மாவட்டம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒலுமடுக் கிராம சேவகர் பிரிவினில் 380ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர்.
இவ்வாறு வாழும் அனைவருமே தமிழ் குடும்பங்கள். இந் நிலையில் குறித்த கிராமசேவகர் பிரிவிற்கு நேற்று முதல் தமிழ் மொழியே தெரியாத ஓர் சிங்களக் கிராம சேவகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட கிராமசேவகரை அனுகி உரையாடியபோது வேறு ஒருவரை அழைத்து சிங்களத்தில் மொழி பெயர்க்குமாறு கோருகின்றார்.
அவ்வாறு மொழிபெயர்ப்பின்பின்னரே பதிலளித்தார்.
இவ்வாறு தமிழ் மக்கள் மட்டும் வாழும் பகுதியில் அதிக தமிழ் இளைஞர்கள் வேலை வாய்ப்பும் இன்றிய நிலையில் காத்திருக்க சிங்கள இளைஞர்களிற்கு வேலை வாய்ப்பினை வழங்கி நியமிக்க இடமின்றி எமது பிரதேசத்திற்கு அனுப்புகின்றனர். பணிக்கு வந்தவர்களிற்கு பணி செய்ய இன்னும் ஒருவர் தேவைப்படுகின்றார்.
இவ்வாறு மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் செல்லும் மக்களோ அல்லது சிங்கள மொழி தெரியாதவர்கள் இக் கிராம சேவகரிடமிருந்து எவ்வாறு சேவையினைப் பெற்றுக் கொள்ள முடியும் . இதனால் உரியவர்கள் குறித்த விடயத்தினில் தலையிட்டு ஆவண செய்யவேண்டும். என்றார்.