கந்தசஷ்டி விரதம் மிகவும் புனிதமானதும் கடுமையானதுமாகும். ஆறு மிளகும் ஒரு குடு வைத் தண்ணீருடனும் ஆறு நாட்கள் உப வாசம் இருந்து அனுஷ்டிப்பது கந்தசஷ்டி விரதமாகும்.
ஆறாம் நாள் சூரன் போர் நடக்கும். சூரசங் காரத்துக்கு முன்னதாக, முருகப்பெருமான் தன் திருப்பெருவடிவத்தை சூரனுக்குக் காட்டி நிற்பார்.
அப்பெரு வடிவம் கண்ட சூரன் முருகனைக் கைதொழுது இறைஞ்சுவான். திருப்பெருவடி வம் கண்டு தன்னிலை உணர்ந்தானாயினும் மீண்டும் அவன் முருகனை எதிர்க்கத் தலைப்பட்டான்.
அதுமட்டுமன்றி சூரன்போர் நடக்கும்போது உருமாற்றம் செய்து முருகனுடன் போர் புரிந்தான்.
இவ்வாறு சூரன் பல முகங்களைக் காட்டி யும் மாமரத்தில் மறைந்து நின்றும் வித்தை செய்து போர் புரிந்த போதிலும் தமிழ்க் கடவுளா கிய கந்தப் பெருமான் அவனைச் சங்காரம் செய்கின்றான்.
வைதாரையும் வாழ வைக்கும் முருகன் தமிழ்க் கடவுள் என்பதால் அவனிடம் இயல் பாகவே இரக்க குணம் உண்டு.
அதனால் சூரனை கொன்றொழிக்காமல், அவனின் மும்மலம் அறுத்து சேவலாகவும் மயிலாகவும் ஆட்கொண்டான். இஃது சூரசங் காரம் பற்றிய சிறுகுறிப்பு.
இனி எங்கள் அரசியல் சூரர்கள் பற்றிப் பார்க்கலாம்.
தென்பகுதி ஆட்சியில் சூரர்கள் தங்கள் முகங்களைக் காட்டத் தலைப்பட்டுள்ளனர். இவ்வாறு மாறிமாறி முகம் காட்டுகின்ற தென் பகுதி அரசியல் சூரர்கள் பற்றித் தமிழ் மக்கள் நன்கு அறிவர்.
அதுமட்டுமல்ல எங்களிடம் இருந்து பாராளு மன்றம் சென்ற தமிழ்ச் சூரர்கள் பற்றியும் நம் மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரி வாகியதும் சிங்க முகத்தைக் காட்டினர். பின் னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து யானை முகம் (கஜமுகம்) காட்டினர்.
இப்போது பாராளுமன்றம் கலைபட்டு விட் டது. அப்பாவிகள்போல சாதுவான மனித முகத்தோடு தேர்தலில் வாக்குக் கேட்க வரப் போகின்றனர்.
இதற்கிடையில் நீதிமன்றத்துக்குச் சென்று தப்பித்துக் கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட் டுள்ளனர்.
பரவாயில்லை சிங்கமுகம், கஜமுகம் காட் டிய எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மனித முகத்தோடு தமிழர் தாயகம் நோக்கி வருவர். சூரர்கள் தலை மாற்றுவர் என்பதை சூரசங்காரத்தில் கற்றுக் கொண்ட தமிழ் மக் கள் சூரர்கள் தலை மாற்றுவதை இனி ஒரு போதும் நம்பமாட்டார்கள்.
எங்ஙனம் மனித முகத்துடன் சூரனை முரு கன் சங்காரம் செய்தாரோ அதேபோல தமிழ் மக்களும் சங்காரம் செய்யத் தலைப்பட்டு விட்டனர்.
இங்கு கந்தசஷ்டி விரத காலத்தில் தமிழ் மக்கள் செய்கின்ற சூரசங்காரம் என்பது பாராளுமன்றப் பதவியை வழங்காமல், வாக் களிக்காமல் அவர்களின் ஆணவத்தை அடக்குவதாகும்.