இது தொடர்பாக அதிருப்தி வெளியிட்டுள்ள அப்பகுதி மக்கள், பௌத்தர்களோ, படையினரோவாழாத பகுதியில் சைவ ஆலய முற்றத்தில் பௌத்த விகாரை ஒன்றை அமைக்க வேண்டியஅவசியம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த காங்கேசன்துறை மத்தி கிராமம்கடந்த 2015ம் ஆண்டு காலப்பகுதியில் மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம்வழங்கப்பட்டிருந்தது.
மக்கள் மீள்குடியேற்றத்திற்காக தங் கள் கிராமத்திற்குசென்றிருந்தபோது, முன்னர் “குமாரகோவில்” அமைந்திருந்த நிலத்தில் அரச மரம்ஒன்றின் கீழ் சிறிய புத்தர் சிலை வைக்கப்பட்டு படையினரால் வணங்கப்பட்டு பின்னர் படையினர் உயர்பாதுகாப்பு வலயத்தை பின்நகர்த்திய போதுகைவிடப்பட்ட நிலையில் அது காணப்பட்டது.
இதேபோல் இடப்பெயர்வுக்கு முன்பதாக காணப்பட்ட “குமாரகோவில்” கூட சிதைந்த நிலையில் பராமரிப்பின்றியே காணப்பட்டதாக கூறும் அப்பகுதி மக்கள் அந்த கோவில்முன்பாகவே தற்சமயம் விகாரை அ மைக்கப்பட்டுள்ளது.
“கமுணு” விகாரை என்ற பெயரில் பிராமண்டமான அளவில் மேற்படி விகாரை அமைக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள்கூறுகின்றனர்.
இதேபோல் குறித்த விகாரைக்குள் குமாரகோவில் பிள்ளையார்சிலைகளும் வைக்கப்பட்டுள்ளது.
எனவே ஒரு சைவ ஆல யம் அமைந்திருந்த இடத்தில்பௌத்தர்களோ, படையினரோ வாழாத தனியே தமிழ் மக்கள் வாழ்கின்ற பகுதியில் பௌத்தவிகாரை ஒன்றை அமைக்க வேண்டியதன் அவசியம் என்ன? என கேள்வி எழுப்பியதுடன்,காங்கேசன்துறை பகுதி வரலாற்று சிறப்புமிக்க நகுலேஸ்வர ம் மற்றும் மாவிட்டபுரம்கந்தசுவாமி ஆலயம் உள்ளிட்ட பல சிறப்பு மிக்க சைவ ஆலயங்களை கொண்ட புண்ணி யபூமியாக விளங்கும் நிலையில் பௌத்த விகாரை ஒன்றை சைவ ஆலயத்தின் முன்பாகஅமைத்தமை திட்டமிட்ட பௌத்த மயமாக்கலின் ஒரு அங்கமா? எனவும்மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக தமிழ்அரசியல்வாதிகள் கூடிய கவன ம் செலுத்த வேண்டும். எனவும் அவர் கேட்டுள்ளனர்.