தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி கிளிநொச்சியில் பல பிரதேசங்ளில் துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
விசுவமடுவை அண்டிய பகுதியிலேயே இவ்வாறு துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன. பிரபாகரனின் புகைப்படம் தாங்கிய குறித்த துண்டுபிரசுரங்களில் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரிகாலன்’ என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மாவீரர் தினம் மற்றும் பிரபாகரனின் பிறந்த தினம் ஆகியவற்றை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையிலான சுவரொட்டிகள் நேற்றைய தினம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் ஒட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.