இன்றைய தினம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு 62ஆவது பிறந்த நாள்.
இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் கூடிய மாணவர்கள் பிரபாகரனின் புகைப்படங்களை வைத்து அவருக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியிருப்பதாக பல்கலைக்கழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேலுப்பிள்ளை பிரபாகரன் கார்த்திகை 26, 1954ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் பிறந்தார்.
வேலுப்பிள்ளையின் இளைய மகனே பிரபாகரனாவார்.
புலம்பெயர் நாடுகள் எங்கிலும், இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் மிக உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.