கேள்விக்குறியாகிவரும் முல்லைத்தீவின் எதிர்காலம்: ரவிகரன்


முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலங்கள் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்ற நிலையில், மாவட்டத்தின் எதிர்காலம் மிகவும் மோசமடைந்து வருகிறது என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் அடுத்து வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தின் முதலமைச்சரின் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற 2ஆம் நாள் விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘முல்லைத்தீவு மாவட்டத்தில் 35 ஆயிரத்து 510 ஏக்கர் நிலம் படையினர், வனவள பரிபாலனசபை மற்றும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. படையினரால் மட்டும் 16 ஆயிரத்து 910 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டுள்ளது.

இந்த 35 ஆயிரம் ஏக்கர் என்பது முதற்கட்ட தகவல் மட்டுமே. இதனை விடவும் அதிகமான காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக முல்லைத்தீவு மாவட்டத்தில் காணிகள் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு வருவதன் மூலம் மாவட்டத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாக சபையின் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்’ என்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila