மாவீரர்களை நினைவுகூருவதில் எந்த தவறும் இல்லை என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்தின் புதிய கட்டடத்தொகுதி இன்று (வியாழக்கிழமை) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், தேசிய மாவீரர் தினம் என்றவுடன் பலரும் குழப்பமடைகின்றனர். ஆனால் அதனால் குழப்பமடைய தேவையில்லை. மாவீரர் தினம் அனுஷ்டிக்கலாம்.
1971, 1978 மற்றும் 1988ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் தெற்கில் இடம்பெற்ற கலவரம் மற்றும் பிரச்சினைகளின் போது கொல்லப்பட்டவர்கள் ஆண்டுதோறும் நினைவுகூரப்படுகின்றனர்.
ஒருவர் இறந்த பின்னர் அவர் நல்லவரா, கெட்டவரா அல்லது கொள்ளைக்காரனா என்பது வகைப்பிரிக்கப்படுவதில்லை.
இந்த பிரச்சினையை பொலிஸார் மீதோ, படையினர் மீதோ, அரசாங்கத்தின் மீதோ திணிக்கப்படக் கூடாது. மனிதாபிமான அடிப்படையில் செயற்படுதல் அவசியம் என்றார்.
இந்த பிரச்சினையை பொலிஸார் மீதோ, படையினர் மீதோ, அரசாங்கத்தின் மீதோ திணிக்கப்படக் கூடாது. மனிதாபிமான அடிப்படையில் செயற்படுதல் அவசியம் என்றார்.