கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இறுதிக் கட்ட போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச் செயல்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளின் போது குறைந்த பட்சம் ஒரு சர்வதேச நீதவானையேனும் இணைத்துக் கொள்ள வேண்டும் என இந்த செயலணி அறிவித்திருந்தது.
இந்த விசேட செயலணியில் அங்கம் வகிக்கும் சிலர் அரச சார்பற்ற நிறுவனங்களின் முக்கியஸ்தர்களாவர்.
நீதிமன்றின் சுயாதீனத்தன்மை குறித்து எவரும் குற்றம் சுமத்தவில்லை. நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான ஓர் நிலையில் செயலணியின் புதிய அறிக்கை பொருத்தமற்றதும் தேவையற்றதுமாகும். செலணியினால் செய்யப்பட்டுள்ள பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
நல்லிணக்கம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மை ஆகியவற்றுக்காக எந்தவொரு தரப்பினரும் வெளிநாட்டு நீதவான்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்யுமாறு பலவந்தப்படுத்த முடியாது.
இவ்வாறான பலவந்தப்படுத்தல்கள் நீடித்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சிங்கள முஸ்லிம் மக்களும் கோரிக்கை விடுப்பார்கள் அழுத்தம் கொடுப்பார்கள்.
தலதா மாளிகை சிறி மஹா போதி அரந்தாலாவ கத்தான்குடி போன்ற சம்பங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படக் கூடும். கோரிக்கை விடுக்கப்படக் கூடும்.
வெளிநாட்டு நீதவான்களை ஈடுபடுத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பே கேட்க முடியாது எனவும் உறுப்பு நாடு ஒன்றின் மீது ஐக்கிய நாடுகள் அமைப்பு அழுத்தம் கொடுக்க முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.