தன்னை போன்ற உருவத்தை ஒத்த ஒருவரின் கடவுச் சீட்டை பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள் நுழைந்த ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
எனினும், குறித்த அகதியிடம் இருந்து 300 பவுண்ட் பணத்தை பெற்றுக்கொண்டு நாட்டுக்குள் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் ஊடம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த குறித்த அகதி, நம்பிக்கை இல்லாமல் நான் இங்கு வந்தேன். இது எனக்கு மிகவும் எளிதாகிவிட்டது.
எனினும், நான் ஒரு தீவிரவாதியாக இருந்திருந்ததால் இது வேறுவிதமான விளைவை ஏற்படுத்தி இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவ்வாறான நடவடிக்கை தீவிரவாதிகளுக்கு வாய்ப்பாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாகவே தீவிரவாத தாக்குதல் இடம்பெறுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எவ்வாறாயினும், அந்த தகவல் அந்நாட்டு மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.