அரசுக்கு கால அவகாசமா? தமிழ் அமைப்புக்கள் கொதிப்பு ஐ.நா. சபைக்கு அவசர மகஜர்


2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் இலங்கை அரசுக்கு விதிக்கப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு மேலும் கால அவகாசம் வழங்குவதை தமிழ் அமைப்புகள் கடுமையாக எதிர்த்துள்ளன.

இலங்கை அரசுக்கு வழங்கப்ப டும் கால அவகாசம் தமிழ் மக்களுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதாகவே இருக்கும் என குற்றம் சாட்டியுள்ள பொது அமைப்புகள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை முன்னெடுத்து ஐ.நா சபைக்கு அவசர மகஜர் ஒன்றை அனுப்பி வைக்கவுள்ளனர். 
ஐ.நா சபைக்கு அனுப்பப்படும் அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

இலங்கையின் அனுசரணை யுடன் ஐ.நா மனித உரிமை பேர வையில் 2015 அக்டோபரில் நிறை வேற்றப்பட்ட 30/1 தீர்மானமானது, மனித உரிமைகள் அச்சுறுத்தலுக்குட்படுத்தப்பட்ட ஒருநாட்டுடன் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை எவ்வாறு ஆக்கபூர்வமாக தொழிற்படுவது என்பதற்கு உதாரணமாக அமையக் கூடியது என அந்நேரத்தில் பரவலாகக் கருத்துரைக்கப்பட்டது. 

ஆனால், இலங்கை அரசாங்கத்தை, இப்பிரேரணையின் இணை அனுசரணையாளர் எனும் தளத்திற்கு கொண்டுவருவதற்காக, பிரேரணையின் உள்ளடக்கத்தில், உறுதியான சர்வதேச நியமங்களுக்கமைவான பொறுப்புக்கூறல், மற்றும் நீதிப்பொறிமுறைகளுக்கான அடித்தளமொன்றை இடுவதற்கான சந்தர்ப்பத்தை இழந்து, தெளிவற்ற வாசகங்களுடன் கூடிய கலப்பு நீதிப்பொறிமுறை ஒன்றிற்கு விட்டுக்கொடுப்பு செய்யப்பட்டு 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையின் கட்டமைப்புகள், உண்மையைக் கண்டறிந்து நீதியை வழங்குவதற்கான அரசியல் விருப்பை கொண்டிராதமையால், இலங்கை அரசாங்கத்தின் உள்ளக நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் அமைகின்ற எந்தவொரு கலப்பு பொறிமுறையும் எமக்கான நீதியைப் பெற்றுத்தராது என நாம் அப்போதே குறிப்பிட்டிருந்தோம். 

குறிப் பாக, ஐ.நா மனித உரிமை பேர வையின் 30/1 தீர்மானம் நிறைவேற்றபபட்ட பின்பு இலங்கை நீதித் துறையால் வழங்கப்பட்ட குமாரபுரம் மற்றும் அமரர் ரவிராஜ் வழக்குகளின் தீர்ப்புகள், இலங்கை நீதித் துறையில் ஆழமாக வேரூன்றியிருக்கின்ற, குறிப்பாக பாதிக்கப்பட்ட வர்கள் தமிழர்களாக இருக்கும் பட் சத்தில், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழமையை உறுதிப்படுத்துகின்றன. அத்தோடு, உண்மையான பொறுப்புக் கூறலில் அரசியல் விருப் பில்லாத இலங்கையின் கட்டமைப் புகளுள், சில வெளிநாட்டு நீதிபதிகளை மட்டும் சேர்த்துக்கொள்வதன் மூலம் மட்டும் பொறுப்புக் கூறல் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லைஎன்பதனை இது வெளிக்காட்டிநின்றது.

ஆயினும், ஐ.நா மனித உரிமை பேரவையின் 30/1 தீர்மானத்தின் மூலம்  பொறுப்புக்கூறலிற்காக (இலங்கை அரசினால்)  ஒத்துக்கொள்ளப்பட்ட ஆகக்குறைந்த கடப்பாடுகளிலிருந்து கூட தற்போது இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக முழுமையாக விலகியுள்ளது. தாமேஇணை அனுசரணையாளர்களாக இருந்து நிறைவேற்றிய, ஐ.நா மனித உரிமைபேரவையின்  30/1 தீர்மானம், குறிப்பாக நிறைவேற்றுப்பந்தி 6 இல் குறிக்கப்பட்ட கடப்பாடுகள் (வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள் உள்ளடக்கப்படவேண்டும் என்றகடப்பாடுகள்), எந்தவகையிலும் தம்மை கட்டுப்படுத்தாது என இலங்கை அரசாங்கம், இந்ததீர்மானம் நிறை வேற்றப்பட்ட மறுநாளிலிருந்தே தொடர்ச்சியாக பல தடவைகள் எண்ணத்திலும் செயற்பாட்டிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 

இந்தகடப்பாடுகள் தம்மைக் கட்டுப்படுத்த மாட்டாதவை என காட்டும் செயற்பாடுகளுக்கு இலங்கை ஜனா திபதி அவர்களே தலைமை தாங்குகிறார். மிகக்குறைந்தளவான கலப்பு பொறிமுறையை பரிந்துரை செய்திருந்த இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கத்துக்கான கலந்தாய்வுச் செயல ணியின் அறிக்கையை நேரடியாகப் பெற்றுக்கொள்வதைக் கூட இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் தவிர்த்திருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே ஐ.நா  மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில், 28.02.17 அன்று உரையாற்றிய இலங்கை வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் உரையானது, வெற்று வார்த்தைகளால் புனையப்பட்டதும், இலங்கை அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டுடன் எந்த விததொடர்பற்றதென்பதோடு, அடிப்படையில் அனைவரையும் பிழையாக வழிநடத்துகின்ற ஒன்றாகும்.

இலங்கை அரசாங்கமானது, 30/1 தீர்மானத்தின் 06ஆம் செயற் பாட்டுபந்தியில் குறிப்பிடப்பட்டவற்றை மட்டுமல்லாது, அத்தீர்மானத்திலிலுள்ள வேறு பல கடப்பாடு களையும் நிறைவேற்றத் தவறியுள்ளது உதாரணமாக:-

1)கணிசமான எண்ணி கையான அரசியல் கைதிகள் இன்னமும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட சிலர் கூட இலங்கை ஆயுதப்படைகளால் நிர்வகிக்கப்படும், ஈவிரக்கமற்ற சித்திரவதைகளுடன் கூடிய மனிதத்துவமற்ற தரம் தாழ்த்தும்  கொடூரமான புனர்வாழ்வு முகாம் களுக்கென அனுப்பப்படுகின்றனர். இவற்றிலிருந்தெல்லாம் விடுவிக்கப்பட்டவர்களும் கூட கடுமையான கண்காணிப்பு மற்றும் தொடர்ச்சியான தொந்தரவுகளிற்கு உட்படுத்தப்படுகின்றனர்.

2) இராணுவத்தின் கட்டுப் பாட்டில் இருக்கும் 1/5 நிலங்கள் கூட இன்னும் விடுவிக்கப்படவில்லை. சிலகாணிகள் (ஆக்கிரமிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அப்பகுதியிலிருந்த இராணுவம், அருகிலிருக்கும் நிலப்பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளதேதவிர, இராணுவமயாமக்கலை நீக்கி, முழுமையான மீள்குடியமர்வுக்கான ஒரு சூழலை உருவாக்கவில்லை. 

இராணுவநீக்கம் இல்லாத காணிவிடுவிப்புகள், இயல்புநிலை உருவாக்கத்துக்கு முட்டுக்கட்டையாகவே தொடர்நது இருக்கின்றன. இதை விட, பெருமளவிலான நிலப்பகுதிகள் தற்போதும் இரா ணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதோடு, வெவ்வேறு முகமூடிகளோடு, தற்போதைய அரசின் கீழும் இலங்கை இராணுவத்தால் காணி அபகரிப்பு தொடர்கிறது. வடக்குகிழக்கில் இராணுவக் குறைப்பு செய்யப்படவில்லை என இலங்கை அரசாங்கம் தானே ஒத் துக் கொண்டு அறிவித்துமுள்ளது.

3)காணாமல் போனோருக்கான அலுவலகம், தனது அடிப்படையில் பிழையான நடைமுறைக ளுடனேனும், நடைமுறைச் செயற்பாட்டிற்கு வராது, இன்னமும் எழுத்துவடிவிலேயே இருக்கிறது.

4)வடக்குகிழக்குமக்களின் பொதுவாழ்க்கை மீதான இராணு வமற்றும்; பொலிஸ் கண்காணிப்பு, இந்தஅரசாங்கத்திலும் தொடர் கிறது ஆதலால், தற்போதைய ‘இயல்புநிலை’ எனும் தோற்றப் பாட்டை பயன்படுத்தி செயற்பாடு களை முன்னெடுக்கும் செயற்பாட் டாளர்கள், தற்போதைய சூழ்நிலை எதிர் காலத்தில் மோச மடையும் பட்சத்தில், அரசாங்கத்தினால் தாம் இலக்குவைக்கப்படக்கூடும் என அஞ்சுகின்றனர். 2001-2004 சமாதான செயன்முறைகள் குலைவடைந்த போதும் செயற்பாட்டாளார்கள் இவ்வாறாகவே குறிவைத்துக் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசு ‘உண்மையைக் கண்டறிதலை’ முன்னிறுத்தி குற்றவியல் நீதியை, அல்லது நீதியை புறந்தள்ள முயற்சிப்பது தொடர்பில் நாம் மிகுந்த கரிசனை கொண்டுள்ளோம். ஆனால் இப்போது இவை இரண்டையுமே பின்தள்ளி அரசியலமைப்பாக்கத்தை முன்னிறுத்தி நீதி, உண்மையைக் கண்டறிதல் ஆகிய இரண்டையும் பிற்போட வேண்டும் என அரசாங்கம் கூறுகின்றது. புதியஅரசியலமைப்பு உருவாக்க செயன்முறையை முன்னிறுத்தி உண்மையையும், நீதியையும், பொறுப்புக் கூறலையும் புறந்தள்ளுதல் காலத்தை இழுத்தடிக்கும் செயலாகநாம் கருதுகிறோம். 

நீதியும் சமாதானமும் (நிரந்தரத் தீர்வும்), இரு வேறான தூண்கள் அல்ல. அவை இரண்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டது. சமாதானத்தை முன்னிறுத்தி நீதியைபுறந்தள்ளல் அரசியலமைப்பாக்க முயற்சியின் நேர்மைத்தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றது. சமாதானத்தையும், நீதியையும் இருதுருவங் களாக அரசாங்கம் அணுகுவது அபாயகரமானதும் இவ்விரண்டிலும் அரசாங்கத்திற்கு அரசியல் விருப்பமில்லை என்பதனை வெளிப்படுத்திநிற்கின்றது. 

எது எவ்வாறாயிருப்பினும் அரசியலமைப்புமுயற்சிகளில் பெரிதளவில் முன்னேற்றங்கள் இல்லை என்பதே உண்மை. அரசியலமைப் பாக்கசபையின் வழிகாட்டும் குழு தன்னுடைய இடைக்கால அறிக் கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. இவ்வறிக்கையை அர  சாங்கத்தின் ஓர் பகுதியினரே தடுத் துவைத்துள்ளனர். இது புதிய அரசியல் திட்டசெயன்முறையில் இடையூறு ஏற்பட்டு விட்டதை சுட்டி நிற்கின்றது. புதிய அரசியலமைப்புத்திட்டம் தொடர்பிலான உரையாடல் இலங்கையின் ஒற்றை யாட்சிமுறையை கேள்விக்குட்படுத்தவில்லை. 

முன்னரைப் போல சிங்கள - பௌத்த மேலாதிக்கவாதம் தொடர்ந்தும் பேணப்படும் என்றுபொது வெளியில் தெற்கின் அரசியல்வாதிகள் உறுதிப்படுத்துகிறார்கள். தமிழ் மக்கள் மீது புதிய அரசியல் திட்டம் எனும் வெற்று வெறிதான நம்பிக்கைக்குப் பதிலாக பொறுப்புக் கூறலை கைவிடுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்படு கின்றது. இறுதியில் அரசியல் தீர்வும் இல்லை நீதியும் இல்லை எனும் நிலைப்பாட்டிற்கே இது இட்டுச் செல்லும்.

ஐ.நா மனிதஉரிமை பேரவை யில் கொண்டுவரப்பட்டதீர்மானம் 30/1 என்பது இலங்கையின் மீதான சர்வதேச சமூகத்தின் பார்வையை திசைதிருப்புவதற்காக என்பது மேற்சொன்னவற்றில் இருந்து தெளிவாகின்றது. கடுமையான நடவடிக்கையில் இருந்து இலங் கையை பாதுகாத்துக் கொள்வ தற்கே இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தற்போது சிரேஸ்ட அமைச்சர்கள் விளக்கம் கொடுக்கின்றனர். எனவே அரசாங்கத்தைப் பொறுத்தவரை மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் அவர் களின் சாணக்கியமான வெளியுறவு கொள்கை உத்தியின் ஓர் அங்கமே அன்றிவேறொன்றுமில்லை. 

ஐ.நா மனித உரிமைபேரவையில் கொண்டுவரப்பட்டதீர்மானம் 30/1 க்கு பின்னரான இலங்கை அரசின் நடவடிக்கைகள் ஐ.நா மனித உரிமை பேரவையின் நம்பகத்தமையை கேள்விக்குட்படுத்துகின்றது. கலப்பு நீதிமன்ற முறை இலங்கைவின் இறையாண்மையை பாதிக்குமென்று கூறி இலங்கை அரசு தனது வாக்குறு தியை நிறைவேற்றாது தட்டிக் கழித்து வந்திருக்கின்றது என்பது ஐ.நா செயன்முறையோடு நாம் ஒத்துழைத்துப் போகவிரும்புகிறோம் என்ற அரசின் பொய்யான வேடத்தை அம்பலப்படுத்துகின்றது.

அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முன்னர்; ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில்,எவ்வளவு தூரம்தாக்கத்தை செலுத்தியுள்ளது என்பதை கணிக்க வேண்டியக டப்பாடு ஐ.நா மனித உரிமை பேரவைக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் உண்டு. தமிழ் மக்களின் கணிப்பின்படி இலங்கை அரசு பாதிக்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்து செயற்பட அரசியல் விருப்பற்று அதே நேரத்தில் சர்வதேசதளத்தில் அவ்வரசியல் விருப்பு உள்ளது போல் காட்டிக் கொள்ள முயல் கின்றது. 

மீண்டும் அதேதீர்மானத்தை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்திற்கு நேர அவகாசம் வழங்கக் கொண்டு வரப்படும் தீர்மானமானது ஏமாற்றுத் தன்மையானது. ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்டதீர் மானத்தை நிறை வேற்றமாட்டேன் என ஓர் அரசு தெளிவாக சொல்லுமிடத்து அவர்களுக்கு அதே தீர்மானத்தை நிறைவேற்ற கால அவகாசம் வழங்குவது ஐ.நா உரிமை பேரவையின் நம்பகத் தன்மையை கேள்விக்குட்படுத்தும். அவ்வாறுகால அவாசகம் வழங்குதல் நீதிக்கான தேடலை நீர்த்துப் போகச் செய்யும். 

வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்கள் சுயாதீனமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வந்துள்ளனர்,தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இலங்கை அரசு கலப்பு நீதிமன்ற முறையை நிராகரித்தமையானது உள்நாட்டில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதை இன்னும் சாத்தியமற்றதாக்கின்றது. தமிழ் மக்களுக்கு உண்மையான நீதிகிடைக்க வேண்டுமெனில்  இலங்கை அரசு இழைத்த பாரியகுற்றங்கள் தொடர்பில் விசாரிக்க தனியான சர்வதேச தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும். 

அல்லது சர்வதேசகுற்றவியல் நீதிமன்றில்  விசாரிக்கப்படவேண்டும். இது தொடர்பில் முன்னெடுப் புக்களை முடுக்கிவிடுதல் ஐ.நா அமைப்பின் கடமையாகும். அது வரைக்கும் ஐ.நா மனிதஉரிமை மீறல்களை கண்காணிக்க மனித உரிமை செயலாளர்  நாயகம் அவர்களின் அலுவலகங்கள் வடக்கு -கிழக்கில் உருவாக்குதல் அவசியமாகின்றது. 

இலங்கைஅரசு தனது வாக்குறு திகளை நிறைவேற்றஅதன் மீது கடுமையானஅழுத்தமே இன்றை யதேவை. அழுத்தத்தைக் குறைப்பது அரசுதனது வாக்குறுதிகளைத் தொடர்நது செயலிழக்கவைக்க ஊக் குவிக்கும். அவ்வாறான நேர்மையான சர்வதேச அழுத்தம் தான் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மீதான உரிமைமீறலைக் குறைப்பதற்கு சர்வதேச சமூகம் எடுக்கக் கூடிய குறைந்தபட்ச நடவடிக்கையாகும்.  இக்கோரிக்கை சர்வதேச சமூகம் இலங்கை தொடர்பில்;, இங்கு நிலவும் மனித உரிமை சூழல் தொடர்பான அரசியல் கணிப்பிற்கு முரண்பட்டதாக இருக்கலாம்;. 

ஆனால் வடக்குகிழக்கில் வாழும் மக்கள் அனுபவ வாயிலாக கண்டு கொண்ட, நாளாந்தம் அனுபவிக்கும் யதார்த்தத்தையே நாம் இவ் விண்ணப்பத்தில் வெளிப்படுத்துகின்றோம். இலங்கை அரசு ஒரு போதும் பொறுப்புக்கூறல் தொடர்பில் நம்பகத்தன்மையான பொறிமுறைகளை வழங்காது என்பது மீண்டும் உறுதியாகியுள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு நீதிகிடைப்பதாயின் இவ்விண்ணப்பத்தில் சொல்லப்பட்டுள்ளவையே தீர்வாகும் என நாம் கருதுகிறோம்.
என்பதாக இந்த மகயரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இம்மகயரில் ஒப்பமிடும் சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் வருமாறு.

மக்கள்; அமைப்புகள்
தமிழ் மக்கள் பேரவை, தமிழ் சிவில் சமூகம், தமிழ் சட்டத்தர ணிகள் சங்கம், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞானபீட ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ்ப ;பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம், வலிந்து காணாமற் போன வர்களின் குடும்பங்கள் சங்கம்,  மனித உரிமைக்கும் அபிவிருத் திக்குமான நிலையம் மனித உரிமை பாதுகாப்புக்கும் மேம்பாட்டுக்குமான நிலையம் திருகோணமலை இலங்கை ஆசிரியர் சங்கம், “இணையம் ’’ மட்டக்களப்பு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒன்றியம் நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணைக் குழு யாழ் மறை மாவட்டம் யாழ் பொருளியலாளர் சங்கம் இந்து இளைஞர் பேரவை மட்டக்களப்பு நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணைக்குழு யாழ்ப்பாணம், மன்னார் பிரஜைகள் குழு, மீனவர் சங்கங்களின் சமாசம் முல்லைத்தீவு கிராமிய உழைப்பாளர் சங்கம் யாழ்ப்பாணம், சுயம் மகளிர்  அமையம், மாற்றத்துக்கான நிலையம் மட்டக்களப்பு கத்தோலிக்க இளைஞர் சம்மேளனம் யாழ்ப்பாணம்

 அரசியல் கட்சிகள்
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடு தலைக் கழகம் (புளொட்), அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, 

நீதியரசரும் வட மாகாண முதலமைச்சருமான  சி.வி. விக்னேஸ்வரன்  (இணைத் தலைவர் தமிழ் மக்கள் பேரவை), சிவசக்தி ஆனந்தன் (நாடாளுமன்ற உறுப்பினர்), செல்வம் அடைக்கலநாதன் (நாடாளுமன்ற உறுப்பினர்), த.சித்தார்த்தன் (நாடாளுமன்ற உறுப்பினர்), க.சுரேஸ் பிரேமச்சந்திரன்  (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் - செயலாளர் ஈ.பி,ஆர்.எல்.எப்), கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், தலைவர் - த.தே.ம.மு), பேராசிரியர். சி.க.சிற்றம்பலம் (வரலாற்றுத்துறை யாழ்.பல்கலை க்கழகம் { சிரேஷ்ட உப தலைவர் தமிழரசுக்கட்சி), கோடிஸ்வரன் (நாடாளுமன்ற உறுப்பினர்),  பொ.ஐங்கரநேசன் - விவசாய அமைச்சர் வடமாகாண சபை, பா.கஜதீபன் (வட மாகாணசபை உறுப்பினர்), வித்தன் கனகரத்தினம் (வட மாகாணசபை உறுப ;பினர்), க.சர்வேஸ்வரன் (வட மாகாணசபை உறுப்பினர்), க.சிவநேசன் (வடமாகாணசபை உறுப்பினர்), ஆ.புவனேஸ்வரன் (வடமாகாணசபை உறுப்பினர்), செ.மயூரன் (வடமாகாணசபை உறுப்பினர்), க.சிவாஜிலிங்கம் (வட மாகாணசபை உறுப்பினர்), வைத்திய கலாநிதி ஞா.குணசீலன் (வடமாகாணசபை உறுப்பினர்), சு.பசுபதிப்பிள்ளை (வடமாகாண சபை உறுப்பினர்), து.ரவிகரன் (வடமாகாணசபை உறுப்பினர்), ரா.துரைரட்ணம் (கிழக்கு மாகாணசபை உறுப்பினர்), திருமதி பத்மினி சிதம்பரநாதன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்), செ.கஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்), 

வைத்திய கலாநிதி சு.பிறேமகிருஷ்ணா (உணர்வழியியல் சிகிச்சை நியுணர்), வைத்திய கலாநிதி பூ.லக்ஸ்மன் (இருதய சிகிச்சை நிபுணர், தமிழ் மக்கள் பேரவை இணைத் தலைவர்), வைத்திய கலாநிதி க.சுரேஸ்குமார் ( பெண் நோயியல் மகபேற்று வைத்திய நிபுணர்), வைத்திய கலாநிதி க.இளங்கோஞானியர், வைத்திய கலாநிதி சி.சிவன்சுதன் (பொது வைத்திய நிபுணர்), வைத்திய கலாநிதி சி.குமரவேள், வைத்திய கலாநிதி எஸ்.சிவபாலன், வைத் திய கலாநிதி தி.பாலமுருகன், வைத்திய கலாநிதி சி.யமுனாநந்தா, பேராசிரியர் வி.பி.சிவநாதன் (பொருளியல் துறை யாழ் பல்கலைக்கழகம்), கலாநிதி ஆ. சரவணபவன் (வர்த்தக முகாமைத்துவ பீடம் யாழ் பல்கலைக் கழகம்), கலாநிதி வி.சிறிதரன் (வர்த்தக முகாமைத்துவபீடம் யாழ் பல்கலைக்கழகம்), கு.குருபரன் (தலைவர் சட்டத்துறை யாழ்.பல்கலைக்கழகம்),
      
 கலாநிதி என். கெங்காதரன் (வர்த்தக முகாமைத்துவ பீடம் யாழ் பல்கலைக்கழகம்), கலாநிதி வி.திருக்குமரன் (விவசாய பீடம் யாழ் பல்கலைக்கழகம்), கலாநிதி எஸ்.ராஜ்உமேஸ் (வர்த்தக முகா மைத்துவ பீடம் யாழ் பல்கலைக் கழகம்), எஸ்.ரவீந்திரன் (சிரேஷ்ட விரிவுரையாளர் புவியியல் துறை யாழ் பல்கலைக்கழகம்), எஸ். சிவகாந்தன் (சமூகவியல் துறை யாழ் பல்கலைக்கழகம்), கே.கே. அருள்வேல் (சிரேஷ்ட விரிவுரையாளர் வர்த்தக முகாமைத்துவ பீடம் யாழ்.பல்கலைக்கழகம்), கலாநிதி க.சிதம்பரநாதன் (சிரேஷ்ட விரிவுரையாளர் நாடகவியல் துறை யாழ்.பல்கலைக்கழகம்), யூட்வோல்டன் (பல்கலைக்கழக கல்லூரி யாழ்ப்பாணம்),  வை.எம். எச்.சி மட்டக்களப்பு, வணபிதா இரவிச்சந்திரன், வணபிதா மங்கள ராஜா, வணபிதா செல்வநாதன் செல்வன், வணபிதா எழில்ராஜன், இன்பநாயகம் (கிராமிய உழைப் பாளர் சங்கம் { தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் வடமா காண ஒருங்கிணைப்பாளர்),  கே.எஸ்.இரட்ணவேல் (சிரேஷ்ட சட்டத்தரணி), வி.விவேகானந்தன் புவிதரன் (சிரேஷ்ட சட்டத்தரணி), திரு.எஸ்.ஏ.ஜோதிலிங்கம் (சட்டத்தரணி), திரு.நடராஜா காண்டீபன் (சட்டத்தரணி), எஸ். விஜகுமார் (சட்டத்தரணி), கணேஸ்வரன் (சட்டத்தரணி), எம்.கிறே சியன் (சட்டத்தரணி), ஜி.அபின்மன்யு (சட்டத்தரணி), வி.மணிவண்ணன் (சட்டத்தரணி), ரி. அர்யூனா (சட்டத்தரணி), கே.சுகாஸ் (சட்டத்தரணி), பி.பார்த்தீபன் (சட்டத்தரணி), வி.திருக்குமரன் (சட்டத்தரணி), எஸ்.சோபிதன் (சட்டத்தரணி) உள்ளிட்ட பலர் ஐ.நாவுக்கான இம்மகஜரில் கையொப்பமிடுகின்றனர்.   
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila