தமிழ்மக்கள் ஒருபோரும் சர்வதேச விசாரணையைக் கோரவில்லையெனவும், வடக்கிலுள்ள இனவாதிகளே சர்வதேச விசாரணையைக் கோரி வருகின்றனர் எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், போர்க்குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் தாம் சர்வதேச விசாரணைக்கு அனுமதியளிக்கப்போவதில்லையெனவும் சூழுரைத்துள்ள அவர் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டுவரும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் தமது உள்ளக விசாரணைப் பொறிமுறையில் நிச்சயம் கலந்துகொள்ள வைப்போம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும், சர்வதேச தலையீட்டிற்கு இடமளிக்காமல் எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து விசேடமாக அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கும் நாங்கள் நீதியைப் பெற்றுக்கொடுப்போம். உண்மையைக் கண்டறியும் பொறிமுறை தொடர்பில் பிரதமர் தலைமையில் கவனம் செலுத்தி வருகின்றோம். எதிர்வரும் சில மாதங்களில் இந்த யோசனையை அமைச்சரவையில் முன்வைக்கவிருக்கின்றோம். அத்துடன் உள்ளகப் பொறிமுறை தொடர்பான செயற்பாடுகள் குறித்தும், எதிர்வரும் இரண்டு வருடங்களில் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பிலும் நாட்டுத் தலைவர் தலைமையில் கலந்தாலோசிக்கவுள்ளோம்.