இலங்கையில் நடைபெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் விசாரிக்கும்போது நாட்டை பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து காப்பாற்றிய படையினர் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படமாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டரநாயக்ககுமாரதுங்க கூறியுள்ளார்.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சின் கீழ் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று தெல்லிப் பளை பிரதேச செயலர் பிரிவில் நடைபெற்றிருந்தது.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
கடந்த வருடம் நான் 2 முறை யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தேன். இன்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ளது எனக்க மகிழ்ச்சியை தருகின்றது.
வடக்கை அபிவிருத்தி செய்வது தொடர்பாக பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி பொருளாதார அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு தேவையான உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை மேற்கொள்ளப்படவுள்ளது.
போருக்கு பின்னர் வழக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் ஒன்றுக் கொன்று முரணாக காணப்பட்டிருந்தது.
இவ்வாறு முரண்பட்டுள்ள அபிவிருத்தினை ஒன்றுடன் ஒன்று தொடர்பு ஏற்படுத்தி முழுமையான அபிவிவிருத்தியினை நடமுறைப்படுத்துவதே இவ் அமைச்சினூடான நோக்கங்களில் ஒன்றாகவுள்ளது.
கடந்த 30 வருட யுத்தம் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் கவலையடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது நாம் ஆற்ற வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.
முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள விடயங்கள் பலவற்றினை செய்ய வேண்டியுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளுகின்றேன்.
குறிப்பாக காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள வேண்டிய தேவையுள்ளது. அதேபோன்று இராணுவம் போரின் போது கைப்பற்றிய மக்களது காணிகளை மீள மக்களிடம் கையளிக்க வேண்டியுள்ளது.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
இதற்கமைய பாதுகாப்பு அமைச்சு, இராணுவம் பொலிஸ் ஆகியோருடன் பேசி ஒரு திட்டத்தையும் தயாரித்துள்ளது.
முதலில் காணமல் போனார்கள் தொடர்பிலான முழுமையான தகவல்களை அடங்கிய பட்டியல் ஒன்றை உருவாக்கி, இதற்கான சட்டங்களை பாராளுமன்றம் ஊடாக நிறைவேற்றியுள்ளோம்.
தற்போது அச் சட்டமானது ஜனாதிபதியின் கையொப்பத்துடன் சட்டமாக நடமுறைப்படுத்தப்படவுள்ளது. ஆனால் இது இலகுவான காரியமாக அமையவில்லை.
காரணம் முன்னால் ஜனாதிபதி ஒருவர் வரலாற்றில் முதலாவதாக நாட்டின் ஒற்றுமையை குழப்பிக்கொண்டிருக்கிறார். இவர் இனவாதத்தையும் மதவாதங்களையும் தூண்டி போராட்டங்களை நடாத்திக்கொண்டிருக்கிறார்.
இப்படியான நிலையிலும் கூட நாம் இச் சட்டத்தை நிறைவேற்றியிருந்தோம். ஆனால் நாம் இச்சட்டங்களை நிறைவேற்றியதனூடாக இராணுவத்தை குற்றவாளிகளாக தண்டிக்கப் போவதில்லை.
உண்மையில் காணாமல் போனவர்கள் தொடர்பாக அவர்களது உறவினர்கள் கோருவது காணாமல் போனவர்கள் எவ்வாறு காணாமல் போனார்கள் என்ற தகவலையே தவிர இராணுவத்திற்கு தண்டனை வழங்க வேண்டும் என அவர்கள் கோரவில்லை.
யுத்தம் இல்லாத அல்லது, நடைபெறாத இடத்தில், சந்தர்ப்பத்தில் மக்களை கொன்றவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். இருப்பினும் இந் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை பாதுகாத்த இராணுவ வீரர்களுக்கு குற்றவாளிகளாக தண்டனையை நாம் வழங்க மாட்டோம்.
நாட்டில் யுத்தம் நடந்த போது நாட்டில் இல்லாது வெளிநாடுகளில் வாழ்ந்த புலம்பெயர் மக்கள் கூறுவது போன்று நாம் எதனையும் செய்துவிட முடியாது.
காணி விடுவிப்புத் தொடர்பான வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்களின் மற்றொரு பிரச்சனையான இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள பொதுமக்களது காணிகளை மீள அவர்களிடம் கையளிப்பதாகும்.
அந்தவகையில் தற்போது யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் வசம் 5300 ஏக்கர் காணிகளே உள்ளது. இதில் 4300 ஏககர் காணிகளே தனியாருக்கு சொந்தமானது. 1000 ஏக்கர் காணி அரசுக்கு சொந்தமானது.
இவ்வாறு இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களது காணிகளிலும் சில குறிப்பிட்டளவான காணிகளை மீள மக்களிடம் கையிளக்க முடியாது என இராணுவம் கூறுகின்றது.
குறிப்பாக காஙகேசன்துறை பலாலி பகுதியில் இராணுவத்தின் முகாம்கள் அமைந்துள்ளதாக இராணுவம் குறிப்பிடுகின்றது. இக் காணிகளில் மக்களிடம் மீள கையளிக்க முடியாத காணிகளுக்கு பதிலாக குறித்த மக்களுக்கு பதில் காணிகளும் நஸ்ர ஈடுகளும் வழங்கப்படும்.
இதேபோன்று முல்லைதீவில் 9 ஆயிரம் ஏக்கர் காணிகளும், வவுனியாவில் 7ஆயிரத்து 500ஏக்கர் காணிகளும், எனைய மாவட்டங்களில் 2 ஆயிரம் ஏக்கரிற்கும் குறைவான காணிகளே இன்னமும் இராணுவத்திடம் உள்ளது.
இவ்வாறு இராணுவத்திடம் உள்ள காணிகள் அனைத்தும் மீளவும் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
மேலும் இந்நாட்டில் அத்தியாவசியமாக புதியதொரு அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் இவ் அரசியல் யாப்பு உருவாக்கப்படுவதன் ஊடாகவே நாட்டில் அனைத்து இனங்களும் சமவுரிமையுடன் வாழக்கூடிய ஒர் ஊழல் உரிவாகும் எனவும் அதற்காக நாட்டின் அனைத்து மக்களும் ஒன்றினைத்து செயற்பட வேண்டும் எனவும் கூறினார்.