ஜெனிவா கூட்டத்தொடர்: கஜேந்திரகுமார் மங்களசமரவீர இம்மானுவேல் கருத்துகள் (காணொளி மற்றும் அறிக்கை)

ஜெனிவா கூட்டத்தொடர்: கஜேந்திரகுமார் மங்களசமரவீர இம்மானுவேல் கருத்துகள் (காணொளி மற்றும் அறிக்கை)

ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் கருத்துக்களும் சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஜிரிஎப் அமைப்பின் தலைவர் இம்மானுவேல் அவர்களின் கருத்துக்களும் இச்செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது.

ஜெனிவா கூட்டத்தொடர் முடிவுகள் தொடர்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி வெளியிட்ட அறிக்கையின் முழுவடிவம் தமிழாக்கம்

சிறிலங்கா அரசாங்கத்தின் நீதித்துறையானது நம்பகத்தன்மையற்றது என்பதனால், சுயாதீனாமனதும் பக்கச்ச்சார்பானதுமான பொறுப்புக்கூறல் செயன்முறைக்கு சர்வதேச பங்களிப்பு அத்தியாவசியமான ஒரு கடப்பாடு என்பதில் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தொடர்ந்தும் பற்றுறுதியுடன் இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
சிறிலங்கா அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட பெரும் குற்றங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாகிய தமிழர்களும், இதே காரணத்திற்காகவே, பொறுப்புக்கூறல் செயன்முறைகள் உள்ளகரீதியாக நிர்வகிக்கப்படுவதை நிராகரித்தும் , சர்வதேச பொறுப்புகூறல் செய்னமுறையின் அவசியத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்.
இருந்த போதிலும், துரதிர்ஷ்டவசமாக , இச்சபையில் (2015 ஒக்டோபர்)நிறைவேற்றப்பட்ட 30/1 இலக்க தீர்மானமானது , ஏறத்தாழ ஒரு உள்ளகப்பொறிமுறையினையே ஏற்படுத்தி, அதில் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய நாடுகளை சேர்ந்த நீதிபதிகள், வழக்குத்தொடுநர்கள் , வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணையாளர்கள் ஈடுபடுத்தப்படுவதை ஊக்குவிப்பதாக தெரிவித்து இருந்தது .
இப்படியாக, குறிப்பிடத்தக்க தளர்வுபோக்கை சிறிலங்கா அரசுக்கு, மனித உரிமை பேரவை வெளிப்படையாக காட்டியிருந்த போதிலும், சிறிலங்கா அரசாங்கமானது, (சர்வதேச பங்களிப்பை கோருகின்ற) பொறுப்புக்கூறல் செயன்முறையின் மிக அடிப்படையான விடயத்திலிருந்து பின்வாங்கிச்செல்வதில் மிகமுனைப்புடன் செயற்படுகின்றது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளி நாட்டு பங்குபற்றல் தொடர்பாக இந்த அவைக்கு எவ்வாறான வாக்குறுதிகளை வழங்கினாலும், சிறிலங்கா அரசில் அவரைவிட பொறுப்பும் அதிகாரமும் மிக்க சிறிலங்காவின் ஜனாதிபதியும் பிரதமரும் இந்த அவைக்கு வெளி விவகாகர அமைச்சரால் வழங்கப்படும் வாக்குறுதிகளை தொடர்ச்சியாக நிராகரிக்கும் விதமாக பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு பங்குபற்றல் இருக்காது என்ற வாக்குறுதியை தமது வாக்கு வங்கியாகிய சிங்கள மக்களுக்கு
தொடர்ச்சியாகவும் தெரிவித்து வருகிறார்கள் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும் . இச்செயற்பாடுகள் , பொறுப்புக்கூறல் விடயத்தில் சிறிலங்கா அரசின் அரசியல் விருப்பின்மையை தெட்டத்தெளிவாக பிரதிபலிக்கின்றது.
தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான தண்டனைகளில் இருந்து குற்றவாளிகளை தப்பவைக்கும் விடயத்தில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த இலங்கை அரசுகள், உறுதியாக இருந்து வந்துள்ளன. தமிழ் மக்கள், தமக்கு எதிராக இன அழிப்பு நடைபெற்றது என்ற குற்றச்சாற்றை முன் வைக்கும் நிலையில், பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு பங்குபற்றல் என்ற அடிப்படை வாக்குறுதியிலிருந்து இலங்கை அரசாங்கமானது விலகாதிருக்க, உறுப்பு நாடுகள் காத்திரமான நடவடிக்கை எடுக்கும்படி நாம் அவர்களை ஆணித்தரமாக வேண்டி நிற்கின்றோம்.
ஜெனிவா கூட்டத்தொடர் முடிவுகள் தொடர்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி வெளியிட்ட அறிக்கையின் முழுவடிவம் ஆங்கிலவடிவம்

ஜெனிவாவில் கஜேந்திரகுமாரின் கருத்துகள்


சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்துகள்


வண பிதா இம்மானுவேல் அவர்களின் கருத்துகள்


பேராசிரியர் போல் நியுமன் மற்றும் நாடுகடந்த தமிழீழ அமைப்பின் பிரதிநிதி சுதன்ராஜ்


Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila