ஐ.பி.சி என்பது புகழ்பூத்த நாடக ஆசிரியர் ஏ.சி.தாசீயஸ் அவர்களால் 1997ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1998ஆம் ஆண்டின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்பிற்கு உட்பட தேசிய ஊடகமாக பரிணமித்த ஒன்று. எனினும் 2009 மே 18இற்குப் பின்னர் வியாபாரிகளின் கைகளில் சிக்கிச் சீரழியத் தொடங்கிய ஐ.பி.சி, கடந்த ஆண்டு தனது தொலைக்காட்சி சேவை மூலம் சிங்களப் படைகளுக்கு வெள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு மக்களிடம் மூக்குடைபட்டது. இந்நிலையில் இவ்வாரம் வெளிவந்திருக்கும் ஐ.பி.சி பத்திரிகை, நியூயோர்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்புபட்டிருந்தமை போன்றும், கடனட்டை மோசடி, போதைவஸ்துக் கடத்தல், கடவுச்சீட்டு மோசடி போன்றவற்றில் ஈடுபடுவோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களில் அங்கம் வகிப்பதன் காரணமாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை இப்பொழுதும் உலக நாடுகளில் நீடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் திட்டமிட்ட வகையில் சிங்கள ஊடகங்களால் மட்டும் இவ்வாறான புரளிகள் பரப்பப்பட்டு வந்த நிலையில், ஒப்புக்குத் தமிழ்த் தேசியம் பேசியவாறு இவ்வாறான உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டைத் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐ.பி.சி பத்திரிகை வெளியிட்டிருப்பது உலகத் தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு சிங்களப் படைகளுக்கு வெள்ளையடிக்கும் ஆவணத்தை ஐ.பி.சி தொலைக்காட்சி ஒளிபரப்பிய பொழுது அது தவறுதலாக நடந்த ஒரு விடயம் என்று அதன் நிர்வாகம் மழுப்பிக் கொண்டது. ஆனால் இம்முறை வெளிவந்திருக்கும் ஐ.பி.சி பத்திரிகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் களங்கம் கற்பிக்கும் கட்டுரையை எழுதியவர் வேறு யாருமல்ல: இலண்டன் தமிழ் மீடியா லிமிட்டட் என்ற பெயரில் இயங்கும் ஐ.பி.சி நிறுவனத்தின் பணிப்பாளரான பற்றிக் டேவிட் நிராஜ் என்பவரே இந்த அவதூறு பரப்பும் கட்டுரையை எழுதியுள்ளார். அதுவும் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவுகூரல் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளைப் அப்பட்டமாகக் கொச்சைப்படுத்தும் இவ்வாறான கட்டுரையை ஐ.பி.சி நிறுவனத்தின் பணிப்பாளர் எழுதியிருப்பது, எவ்வாறான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஐ.பி.சி இயங்குகின்றது என்பதை தெளிவுபடுத்தி நிற்பதாக அவதானிகள் கூறுகின்றனர். |
மூக்குடைபட்டுப் போன ஐ.பி.சி நிறுவனம் ! - மீண்டும் புரளிகிளப்பி சாதனை..!!
Posted by : srifm on Flash News On 01:48:00
Related Post:
Add Comments