இதுவரை வன்முறை கலாசாரம் இல்லாத கட்சிகளாக இலங்கைத் தமிழரசு கட்சியும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் மட்டுமே உள்ளதாக வடமாகாண சபை உறுப்பினரும் சுமந்திரனின் சீடர்களிலும் ஒருவருமான சுகிர்தரன் தெரிவித்துள்ளார்.
தனது முகநூலில் பக்கத்தில் இத்தகவலைத் தெரிவித்துள்ள மாகாண சபை உறுப்பினர் சுகிர்தரன் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வன்முறைக் கலாச்சாரப் பின்னணி உள்ள கட்சி என்பதை தனது குரு சுமந்திரனின் பாணியில் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் சமயங்களில் தன்னை விடுதலைப்புலிகளின் ஆதரவாளனாகக் காட்டி வாக்குச் சேகரிக்கும் சுகிர்தரன் அவர்கள் சுமந்திரன் அவர்களின் தமிழ்விரோதச் செயற்பாடுகளுக்கு தனது பூரண ஆதரவை வழங்குபவர் என்பது குறிப்பிடத்தக்கது.