பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக புதிதாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் உள்ளடக்கம் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தம்மிடம் எவ்வித ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளாத நிலையில் குறித்த சட்ட வரைபுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை தம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளமை தொட ர்பில் த.தே.கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் அக் கட்சியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனால் நேற்றையதினம் அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது, முன் மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட் டம் தொடர்பிலான கொள்கை மற்றும் நீதிப்பொறிமுறைக்கு அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம் தொடர்பில் ஆழ்ந்த அவதானத்தை செலுத்தியுள்ளது. அமைச்சரவை பத்திரமாக கடந்த ஏப்ரல் 25ம் திகதி அங்கீகரிக்கப்பட்டதும் ஊடகங்களில் பிரசுரமாகியிருந்ததுமான இந்த வரைபு பொறிமுறையின் கட்டளைகள் தொடர்பில் எம்மோடு ஆலோசிக்கப்படவில்லை.
இந்த வரைபு பொறிமுறையானது, சிவில் உரிமைகளை கட்டுப்படுத்துவதாகவும் அரச பாதுகாப்பு அமைப்புகள் மீதான நீதித்துறையின் கட்டுப்பாட்டினை குறைவடைய செய்வதாகவும், அத்தோடு கூட சாத்தியமான துஷ்பிரயோகத்திற்கும் துன்புறுத்தலுக்கும் வழிவகுப்பதாக அமைந்திருப்பதனையிட்டு நாம் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.
நாம் சந்தேக த்திற்கிடமின்றி, அடிப்படை உரிமைகளை உள்வாங்கியதும், சட்ட ஒழுங்கிற்கு இசைவா னதும், சட்டத்திற்குட்பட்ட வகையில் பயங்கரவாதத்தைதடுப்பதும்,
தண்டனை வழங்குவதுமான ஒரு நீதிப் பொறி முறைக்கு ஆதரவு வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளோம். இன்று வரை நாம் பாராளுமன்றத்தில் ஆக்கபூர்வமாக செயற்பட்டுளோம். எனவே இந்த வரைபு தொடர்பில் அரசாங்கத்தின் திருப்பத்தினையிட்டு நாம் அமைதியற்ற ஒரு சூழ்நிலைக்கு உள்ளாகி யுள்ளோம்.
முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கான வரவிலக்கணமானது, சர்வதேச மட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பிலான எல்லைகளுக்கு அப்பால் செல்லு வதை நாம் அவதானிப்பதோடு, மேலும் கட ந்த காலங்களில் மாற்று கருத்து கொண்ட அசாத்சாலி போன்ற அரசியல்வாதிகளையும் மற்றும் திஸ்ஸநாயகம் போன்ற ஊடகவிய லாளர்களையும் தண்டிப்பதற்காக பயன்படுத் தப்பட்ட பேச்சு சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளுக்கு வலுச்சேர்க்கும் ஒன்றாக காணப்படுவதனையும் அவதானிக்கிறோம்.
இந்த வரைவிலக்கணங்களானது பாரியளவில் தெளிவற்றவையாகவும், பதில் இல்லாதவை யாகவும் காணப்படுவதோடு, இலங்கையில் பரந்த வேற்றுமைக்கு ஆதரவான பரிந்துரையாடல் தொடர்பில் சிக்கலான தாக்கத்தினை கொண்டிருக்கும்.
மேலும் முன்மொழியப்பட்டுள்ள இந்த வரைபு பொறிமுறையானது, சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டபின்னர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டாலும் நீதிபதி நிறைவேற்று அங்கத்தில் ஒரு பகுதியாக இருக்கும் படிக்கான அரசியல் யாப்பிற்கு எதிரான நீதித்துறையின் தனித்துவத்தினை இல்லாமல் செய்வதற்கு உதவியாக இருக்கின்றது. சித்திரவதையினை தடுப்பதற்கான பாதுகாப்பான முக்கிய அம்சங்களில் ஒன்றான வாக்குமூலங்களை இல்லாதொழித்தல்போன்றவை ஆரம்பத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் அவை மாற்றப்பட்டுள்ளன.
தற்போதுள்ள பொறிமுறையானது சில சந்தர்ப்பங்களில் வாக்குமூலங்களை சேர்த்துக் கொள்வதற்கு ஊக்கமளிப்பதாக இருக்கின்றது, ஆனால் இலங்கையில் தொடர்ந்தும் இடம்பெறும் பாரியளவிலான சித்திர வதைகளை கொண்டு நோக்குகின்ற போது சித்திரவதைகளை தடுப்பதற்கு அவைபோது மானதாக இல்லை. மேலும் இந்த சட்டமானது பயங்கரவாதத்தோடு எவ்வகையிலும் தொடர்பில்லாதவர்களின் உரிமைகளை பாரியளவில் மீறுவதற்கு அனுமதி அளிக்கின்றது.
அடிப்படை தேவையான சித்திரவதை மற்றும் வலிந்து காணாமற்போக செய்யப்படுதல் போன்றவற்றை தடுக்கு முகமாகவும், துஷ்பிரயோகத்தினை தடுத்து பயங்கரவாதத்திற்கான உண்மையான அச்சுறுத்தலை ஆக்கபூர்வமாக விசாரணை செய்யும் படியாகவும் இந்த வரைபினை அவசரமாக மீளாய்வு செய்வதனை மறுபரிசீலனை செய்யுமாறு நாம் அரசாங்கத்தினை வலியுறுத்த விரும்புகிறோம்.
முன்மொழியப்பட்டுள்ள இந்த வரைபானது நாட்டின் பாதுகாப்பையோ அல்லது இலங்கையர்களின் சுதந்திரத்தையோ உறுதி செய்யும் ஒன்றாக காணப்படவில்லை. மாறாக இது மக்கள் மீதான கேள்வி கேட்க முடியாத நிறைவேற்று அதிகாரத்திற்கு மேலும் வலுச்சேர்ப்பதாகவும், பன்முகத் தன்மை மற்றும் பேச்சு சுதந்திரத்திற்க்கு தடையாகவும் மற்றும் சித்திரவதை துன்புறுத்தல்கள் மேலும் இடம்பெற வழிசமைக்கும் ஒன்றாகவுமே காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பயங்கரமான சித்திரவதைகளின் பின்னணியில், எமது மக்களின் உரிமைகளின் பாதுகாப்பானது, வர்த்தக நன்மைகள் என்ற பலிபீடத்தில் பலியிடப்பட முடியாது என்பதனை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம் என அதில் தெரிவிக்கப் பட்டது.