முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பாகங்களில் இடம்பெற்று வரும் வன்முறைகள் தொடர்பாக நாம் ஆழ்ந்த கரிசனை கொள்கின்றோம். இவ்வன்முறைகள் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர சட்ட ஒழுங்கைப் பேணுவதற்கான நிறுவனங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் வன்முறையை சகித்துக் கொள்வதன் மூலம் அவ்வன்முறைக்கு உடந்தை போகும் அணுகுமுறையை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும். என்று தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப் பேச்சாளர்கள் குமாரவடிவேல் குருபரன், ரூ எழில் ராஜன் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது தொடர்ந்தும் வன்முறைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.