இதேவேளை, பொலிஸ் அதிகாரியொருவர் எழில்ராஜனை மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளார் என மன்னிப்புச்சபை தெரிவித்துள் ளது. நினைவுத்தூபியில் பொறிக்கப்பட்ட பெயர் விவரங்களை அந்த அதிகாரி கோரியுள்ளார் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.நினைவுத்தூபியில் உள்ள பெயர்களில் விடுதலைப் புலிகளின் பெயர்களும் காணப்படுவதாக அதிகாரிகள் தீர்மானித்தால் அருட்தந்தை எழில்ராஜன் இலங்கையின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுச் சித்திரவதை செய்யப்படலாம் எனவும் மன்னிப்புச் சபை கூறியுள்ளது.எழில்ராஜனின் பாதுகாப்பு குறித்து கரிசனை கொண்டுள்ளதாகவும் மன் னிப்புச்சபை தெரிவித்துள்ளது. |
நினைவுகூரலுக்கு ஏற்பாடு செய்த எழில்ராஜனுக்கு துன்புறுத்தல்! - சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்
Related Post:
Add Comments