அனர்த்த மீட்பு; உதவியா? உபத்திரவமா? (சமகாலப் பார்வை)

VRA-20170603-L01-VWS.indd

நவீன உலகின் பாது­காப்புத் திட்­டங் ­களில், அனர்த்த மீட்பும் ஒன்­றாக மாறி­யி­ருக்­கி­றது. 20ஆம் நூற்­றாண்டின் இறுதி வரையில் காணப்­பட்ட பாது­காப்பு ஒழுங்கு முறைகள் நேர­டி­யான போர்­க­ளையும் அதற்­கான பாது­காப்புத் திட்­டங்­க­ளையும் கொண்­டி­ருந்­தன. ஆனால் 21ஆம் நூற்­றாண்டின் பாது­காப்பு ஒழுங்­கு­முறை வேறு­பட்­டது. நாடு­க­ளுக்­கி­டை­யி­லான போர்­களும், உல­க­ளா­விய போர்­களும் மாத்­தி­ர­மன்றி உள்­நாட்டுப் போர்­களும் கூட இப்­போது மட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு விட்­டன.
குறிப்­பிட்ட சில நாடு­க­ளுக்­கி­டையில் ஆயுதப் போட்­டிகள் இருந்­தாலும், போர்­களை மையப்­ப­டுத்­திய பயிற்­சி­களும் ஒத்­தி­கை­களும் குறைந்­தி­ருக்­கின்­றன. முன்னர் பனிப்போர் காலத்தில், நேட்டோ, வார்ஸோ என்று அணி­பி­ரிந்து மோதிக் கொண்­டது போன்ற சூழல் இன்று இல்லை.
தற்­போது அமெ­ரிக்­கா­வுக்குப் பின்னால் குறிப்­பிட்ட நாடு­களும், சீனா, ரஷ்யா போன்­ற­ வற்­றுக்குப் பின்னால் சில நாடு­களும் இருந்­தாலும், அவை பனிப்போர் காலத்தைப் போன்ற பயிற்­சிகள், ஒத்­தி­கை­களில் ஈடு­ப­டு­வ­தில்லை.
கால மாற்­றமும், பாது­காப்பு முறை மாற்­றமும், உலக ஒழுங்கில் ஏற்­பட்­டி­ருக்­கிற மாற்­றங்­களும் இந்த நிலையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. அதற்­காக வல்­ல­ரசு நாடுகள் ஆயுதப் போட்­டி­களில் இருந்து விலகிக் கொள்­ளவோ, தமது பாது­காப்பு விரி­வாக்கத் திட்­டங்­களை விலக்கிக் கொள்­ளவோ தயா­ராக இல்லை.
நேர­டி­யாக இல்­லா­வி­டினும் மறை­மு­க­மா­க­வேனும் பாது­காப்பு ரீதி­யாக, நாடு­களை தம்­முடன் இணைத்து வைத்­தி­ருப்­ப­தற்­காக வல்­ல­ர­சுகள் முயற்­சிக்­கின்­றன. அதற்­காக வெவ்­வேறு அணு­கு­மு­றை­க­ளையும் திட்­டங்­க­ளையும் செயற்­ப­டுத்­து­கின்­றன.
அவ்­வாறு செயற்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற திட்­டங்­களில் ஒன்று தான், அனர்த்த மீட்பு மற்றும் உதவி ஆகும். எதிர்­பா­ராத அனர்த்­தங்கள் ஏற்­ப­டு­கின்ற போது அதனை எதிர்­கொள்­வ­தற்­கான தயார் படுத்­தல்கள், பயிற்­சி­களை மேற்­கொள்­வதும், உத­வி­களை வழங்­கு­வதும் இந்த பாது­காப்பு முறையில் அடங்­கி­யுள்­ளது.
இலங்­கையில் போர் முடி­வுக்கு வந்த பின்னர், அமெ­ரிக்கா, இந்­தியா, ஜப்பான் உள்­ளிட்ட பல நாடு­களின் கடற்­படைக் கப்­பல்கள் இலங்­கைக்கு வரு­கின்­றன. இதன்­போது இலங்கைக் கடற்­ப­டை­யுடன் இணைந்து கூட்டுப் பயிற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அவ்­வா­றான பயிற்­சி­களில் பிர­தா­ன­மா­னது, அனர்த்த மீட்பு மற்றும் உதவி பற்­றி­ய­தாகும்.
போர்க்­கால மீறல்கள் தொடர்­பான குற்­றச்­சாட்­டு­களில் சிக்­கிய இலங்கைப் படை­க­ளுக்கு பயிற்­சி­களை அளிப்­பதில் அமெ­ரிக்கா பின்­வாங்­கி­யி­ருந்த கால­கட்­டத்தில் கூட, இலங்கை இரா­ணுவம் மற்றும் கடற்­ப­டைக்­கான அனர்த்த மீட்பு மற்றும் மனி­தா­பி­மான உத­விகள் தொடர்­பான பயிற்­சி­களை அளித்துக் கொண்டு தான் இருந்­தது.
இப்­போது இது அனர்த்­த­மீட்பு உதவி ஒத்­தி­கை­க­ளா­கவும், கூட்டுப் பயிற்­சி­க­ளா­கவும் மேலும் விரி­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தியக் கடற்­படை, அவுஸ்­தி­ரே­லியா, ஜப்பான் போன்ற பல நாடுகள் இலங்­கை­யுடன் இணைந்து அனர்த்த மீட்பு பயிற்­சி­களில் ஈடு­ப­டு­கின்­றன.
தற்­போ­தைய பூகோள அர­சியல் சூழலைக் கருத்தில் கொண்டு, நாடு­க­ளுக்­கி­டை­யி­லான பாது­காப்பு ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்­து­கின்ற ஓர் அம்­ச­மாக இந்த அனர்த்த மீட்பு பயிற்­சிகள் மற்றும் நட­வ­டிக்­கைகள் மாறி­யி­ருக்­கின்­றன.
இதற்குப் பின்னால் இரா­ணுவ நோக்­கங்­களும், மூலோ­பா­யங்­களும் ஒளிந்­தி­ருப்­பது வெளிப்­ப­டை­யாகத் தெரி­வ­தில்லை.
2015ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நேபா­ளத்தை பெரும் பூகம்பம் ஒன்று தாக்­கி­யது. பேர­ழி­வு­களை ஏற்­ப­டுத்­திய அந்த பூகம்­பத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உதவ பல்­வேறு நாடு­களும் உத­வி­க­ளையும் உதவிக் குழுக்­க­ளையும் அனுப்பி வைத்­தி­ருந்­தன.
அப்­போது அமெ­ரிக்­காவில் இருந்து அவ­சர அவ­ச­ர­மாக ஒரு மீட்புக் குழு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்தக் குழு­வினர் பைன்டர் என்ற கரு­வி­களை வைத்­தி­ருந்­தனர். Finding Individuals for Disaster and Emergency Response (FINDER) என்­பது தான் அதன் விரி­வாக் கம். நாசாவும், அமெ­ரிக்­காவின் உள்­நாட் டுப் பாது­காப்புத் திணைக்­க­ளமும் இணைந்து உரு­வாக்­கி­யி­ருந்த மிக நவீ­ன­மான கருவி அது. நிலத்­துக்குக் கீழ் சிக்­கி­யி­ருப்­ப­வர்கள் அல்­லது பதுங்­கி­யி­ருப்­ப­வர்­களை, அவர்­களின் இத­யத்­து­டிப்பை வைத்துக் கண்­ட­றியும் தொழில்­நுட்பம்.
20 அடி ஆழ­முள்ள கொங்றீட் அல்­லது 30 அடி ஆழத்தில், கட்­டடச் சிதை­வு­க­ளுக்குக் கீழ் இருப்­ப­வர்­களை, அவர்­களின் இதயத் துடிப்பை வைத்து அது காட்டிக் கொடுத்து விடும்.
இதனைப் பரி­சோ­தித்துக் கொள்­வ­தற்கு தான், அமெ­ரிக்­காவின் சிறப்பு மீட்புக் குழு காத்­மண்டு வந்­தி­ருந்­தது. அந்தக் குழு­வி­னரால் 4 பேர் இந்த தொழில்­நுட்­பத்தைக் கொண்டு மீட்­கப்­பட்­டி­ருந்­தனர்.
கொங்றீட் பதுங்­கு­ கு­ழிக்குள் இருப்­ப­வர்கள் பற்றி எங்கு வைத்தும் சோத­னை­யிட முடியும், ஆனால் சிதை­வு­க­ளுக்குள் சிக்­கி­யி­ருப்­ப­வர்கள் தொடர்­பாக இது­போன்ற தரு­ணங்­களில் தான் கண்­ட­றிய முடியும். பாரிய பதுங்­குகு­ழிகள் மற்றும் அவற்­றுக்குள் ஒளிந்­தி­ருப்­ப­வர்­களை கண்­ட­றியும் தொழில்­நுட்­பத்தை மேலும் முன்­னேற்­று­வ­தற்­கா­கவே நேபா­ளத்தில் அனர்த்த மீட்பு நட­வ­டிக்­கைக்கு அமெ­ரிக்கா பயன்­ப­டுத்திக் கொண்­டது.
அது­போலத் தான், அனர்த்த மீட்புப் பணி­களில் ஈடு­ப­டு­கின்ற நாடுகள், தமது இரா­ணுவ நலன்­க­ளையும் புறக்­க­ணித்துச் செயற்­ப­டு­வ­தில்லை.
இலங்­கையில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட பின்னர், கடற்­ப­டை­யி­ன­ருக்கு அனர்த்த மீட்பு மற்றும் உதவி தொடர்­பாக, அமெ­ரிக்கா பெரு­ம­ளவு பயிற்­சி­களை அளித்­துள்­ளது. இதற்­காக அமெ­ரிக்க கடற்­ப­டையின் பாரிய போர்க்­கப்­பல்கள் கொழும்பு, திரு­கோ­ண­மலை, அம்­பாந்­தோட்டை துறை­மு­கங்­க­ளுக்கு வந்து சென்­றன.
ஆனாலும் கடந்த மே 25ஆம் திகதி ஏற்­பட்ட வெள்ளம் மற்றும் நிலச்­ச­ரிவு அனர்த்­தங்­களில் மீட்பு பணி­களில் ஈடு­பட அமெ­ரிக்கா தனது படை­களை அனுப்­ப­வில்லை. 2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்­பட்ட போது அமெ­ரிக்க கடற்­படைக் கப்­பல்கள் வந்து மீட்புப் பணி­களில் ஈடு­பட்­டன. அது­போல, இந்த முறை அமெ­ரிக்கா கள­மி­றங்­க­வில்லை.
ஏனென்றால், இலங்­கைக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில் நெருக்­க­மான உறவு இருக்­கி­றது. இரா­ணுவ தேவை­களை வெளிப்­ப­டை­யா­கவே நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­கான வாய்ப்­பு­களும் இருக்­கின்­றன.
அதை­விட 2004 இல் ஏற்­பட்ட பாதிப்­புகள், இதனை விட மோச­மா­னது என்­ப­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும். எனவே, இம்­முறை தனது படை­களை அனுப்ப வேண்­டிய தேவை அமெ­ரிக்­கா­வுக்கு ஏற்­ப­ட­வில்லை.
ஆனால், இலங்­கை­யிடம் இருந்து உதவிக் கோரிக்கை விடுக்­கப்­பட்­ட­வுடன், இந்­தியா அடுத்த நாளே உத­விப்­பொ­ருட்கள், மற்றும் மீட்புக் குழுக்­க­ளுடன் கப்­பல்­க­ளையும் அனுப்பத் தொடங்­கி­யது.
ஐஎன்எஸ் கிர்ச், ஐஎன்எஸ், சர்துர், ஐஎன்எஸ் ஜலஷ்வா ஆகிய மூன்று கப்­பல்­களில் உதவிப் பொருட்­க­ளுடன், பட­குகள், ஹெலி­க­ளுடன் மீட்பு உதவிக் குழுக்­களும், மருத்­துவக் குழுக்­களும் கொழும்பு வந்­தன.
இந்­திய கடற்­ப­டையின் ஹெலிகள், தாரா­ள­மாக மீட்­புப்­ப­ணி­க­ளுக்­காக கொழும்பில் இருந்து களுத்­துறை, காலி, மாத்­தறை வரை பறந்து திரிந்­தன. இந்­தியக் கடற்­படை மீட்புக் குழுக்கள், வெள்ளம் பாதித்த பகு­தி­களில் மீட்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டன. மருத்­துவக் குழு­வினர் சிகிச்சை அளித்­தனர்.
அவ­சர உத­விக்­கான 1990 என்ற அம்­பி­யூலன்ஸ் சேவையை இலங்­கையில் இந்­தியா ஆரம்­பித்த போது, அதனை இந்­திய புல­னாய்வு அமைப்பே கையாள்­வ­தா­கவும், தக­வல்­களைச் சேக­ரிக்கப் பயன்­ப­டுத்­து­வ­தா­கவும், சிங்­கள பௌத்த அமைப்­பு­களும், தலை­வர்­களும் குற்­றச்­சாட்­டு­களை எழுப்­பி­னார்கள்.
ஆனால், இந்­தியா வழங்­கிய 38 அம்­பி­யூ­லன்ஸ்கள் அனர்த்த மீட்பில் பயன்­ப­டுத்­தப்­பட்­டன. இந்­திய கடற்­ப­டையின் மீட்புக் குழுக்கள் தேவை­யான இடங்­க­ளுக்கு சென்று வந்த போதெல்லாம் யாருமே வாய்­தி­றக்­க­வில்லை. ஏனென்றால் இத்­த­கைய கட்­டங்­களில் இது­போன்ற உத­வி­களும் தேவை.
அதே­வேளை உதவி என்ற போர்­வையில் வல்­ல­ரசு நாடுகள் தமது இரா­ணுவ நலன்­களைப் பெற்றுக் கொள்­வது இயல்­பான விடயம் தான்.
இந்­தியா மாத்­தி­ர­மன்றி, பாகிஸ்­தானும், பிஎன்எஸ் சுல்­பிகார் என்ற போர்க்­கப்­பலில் ஹெலிகள், பட­கு­க­ளுடன் மீட்புக் குழுக்­க­ளையும், உதவிப் பொருட்­க­ளையும் அனுப்­பி­யி­ருந்­தது. பாகிஸ்தான் மீட்புக் குழுக்­களும் தாரா­ள­மா­கவே பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் நட­மா­டின.
அது­போ­லவே சீனாவும், சாங் சுன், ஜிங் சோ, சாவோ ஹூ ஆகிய மூன்று போர்க்­கப்­பல்­களில் உத­வி­களை அனுப்­பி­யி­ருந்­தது. சீனக் கப்­பல்­க­ளிலும், உதவிக் குழுக்கள் வந்­தன. ஆனால் அவை தாம­த­மா­கவே வந்து சேர்ந்­தன.
இலங்­கையில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு, கிட்­டத்­தட்ட இரண்­டரை ஆண்­டு­க­ளுக்குப் பின்னர், முதல் முறை­யாக சீனப் போர்க்­கப்­பல்கள் கடந்த வாரமே கொழும்பு வந்­தி­ருந்­தன.
கடந்த மே மாதம், நீர்­மூழ்கி ஒன்றை கொழும்பு துறை­மு­கத்தில் தரித்து நிறுத்­து­வ­தற்கு சீனா அனு­மதி கோரி­யி­ருந்­தது, அதற்கு இலங்கை மறுப்பு வெளி­யிட்­டி­ருந்­தது.
இந்தக் கப்­பல்கள், கொழும்­புக்­கான பயணத் திட்­டத்தில் தான் இருந்­தன என்றும், அனர்த்தம் ஏற்­பட்­டதால் தான் அதன் நோக்கம் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­ட­தாக கூறப்­பட்­டாலும், அனர்த்த மீட்பு மற்றும் உதவி என்பதை மையப்படுத்தியே இந்தக் கப்பல்களின் வருகை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
அனர்த்த மீட்பு விடயத்தில் இந்தியா பிராந்திய தலைமைத்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றது, தானும் இலங்கைக்கு படைகளை அனுப்பி உதவி மீட்பில் ஈடுபடும் அளவுக்கு நெருக்கத்துடன் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்ள பாகிஸ்தான், முயன்றது.
அதுபோலவே, ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர் அடைக்கப்பட்டிருந்த தனக்கான கதவுகளை திறந்து கொள்வதற்காக சீனா இந்த அனர்த்த மீட்பு விடயத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஆக அனர்த்த மீட்பு என்பது வல்லாதிக்க நாடுகளின் இராணுவ நலன்களையும் இலக்கு வைத்த ஒன்றாகத் தான் மாறியிருக்கிறது.
ஒரு பக்கத்தில் அனர்த்தங்களில் சிக்கியுள்ள மக்களுக்கான உதவிகளை வழங்குவதில் கைகோர்த்திருப்பதான சகோதர உணர்வை இது வெளிப்படுத்தினாலும் அதற்குப் பின்னாலும் ஆபத்தான இராணுவ நோக்கங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila