கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தெரிவிக்கையில்,
“நாவற்குழி விகாரை விடயத்தில் நீதிமன்றத்தின் செயற்பாடு சிறந்த ஒரு விடயமாக கருதப்படுகின்றது.
நாவற்குழியில் நிர்மாணிக்கப்படும் விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குறித்த நிர்மாணப்பணிகளை நிறுத்துமாறும் நாவற்குழி பிரதேச செயலாளரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து குறித்த விகாரைக்கான நிர்மாணப்பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளில்,
“நாட்டில் நடைமுறையிலிருக்கும் அரசியலமைப்பின் 9ஆம் சரத்தின் பிரகாரம் பௌத்த மதத்திற்கான முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதேசசபையின் சட்டத்திட்டம் இரண்டாம் பட்சமாகவே கருதப்படும், இதனால் விகாரையின் நிர்மாணப்பணிகளை முன்னெடுக்குமாறு” சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதியினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது நாட்டின் நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
வடக்கில் தற்போது முதலமைச்சர் விக்னேஸ்வரனும், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் இனவாதமாக செயற்படுவதுடன், மக்களை குழப்பி அதன் வழியில் வழிநடத்த முயற்சிக்கின்றனர்.
இவ்வாறானவர்களுக்கு சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்த சேகரன் ஏனைய மதத்துக்கு வழங்கிய முன்னுரிமையை சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என தேசிய புத்திஜீவிகள் சங்க சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் - நாவற்குழியில் விகாரை அமைப்பதற்கு அனுமதி வழங்கியதை தேசிய சங்க சபையின் அனுநாயக்க கொடபொல அமரகித்தி தேரர் பாராட்டியுள்ளார்.
இந்த தீர்ப்பானது அடிப்படைவாதிகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.