வடமராட்சி கிழக்கினில் சட்டவிரோத மண் அகழ்வு உச்சம் பெற்றுள்ளதான குற்றச்சாட்டுக்களின் மத்தியினில் இலங்கை கடற்படை களமிறக்கப்பட்டுள்ளது.அவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கையினில் ஈடுபடுதக்தப்பட்டுள்ள இலங்கை கடற்படை மீது மணல்கொள்ளையர் தாக்குதல் நடத்த முற்;பட்டதையடுத்து எச்சரிக்கை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளி மாலை நடந்த இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் கடற்படை, இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மணல்கொள்ளையர்கள் மீது அண்மையில் காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினரது காவலரண் மற்றும் வாகனங்கள் பதிலுக்கு தாக்கப்பட்டிருந்தது. அத்துடன் கொல்லப்பட்ட இளைஞனின் கிராமத்தவர்கள் தாக்குதல் நடத்தலாமென்ற அச்சங்காரணமாக காவல்துறை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன..
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சட்டவிரோத மணல்கொள்ளையர்கள் அளவுகணக்கில்லாமல் மணற்கொள்ளையில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கடற்படையினர் மணல் கொள்ளையினை கட்டுப்படுத்த இன்று களமிறக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், இன்று மாலை வடமராட்சி கிழக்கில் கடற்படை சிப்பாய் மீது; தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப்பகுதியில் நடந்த அசம்பாவிதத்தில் கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். தற்போது அந்தப்பகுதியில் அதிகளவு கடற்படையினரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Add Comments