பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்றுமுன்தினம் முதல் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டம் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மக்கள் எதிர்நோக்கிய அசௌகரியங்களை கருத்தில் கொண்டு எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவை என அரசு நேற்று முன்தினம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. அந்த அறிவித்தலுக்கு அமைய பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த முத்துராஜவல மற்றும் கொலன்னாவ எண்ணெய்க் களஞ்சியங்கள் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் அரசு அறிவித்திருந்தது. எரிபொருள் விநியோகமானது அத்தியவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் அனைவரும் கடமைக்குத் திரும்ப வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான வாக்கெடுப்பின்போது நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களிடையே அமைதியின்மை ஏற்பட்டது. குழப்ப நிலை காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை வழமைப் போன்று நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து நாடாளுமன்ற அமர்வு பிற்போடப்பட்டது என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். |
நாடாளுமன்றத்தில் குழப்பம்!
Related Post:
Add Comments