சுவிஸ்குமாரை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது பொலிஸ் திணைக்களத்தின் அசாதாரண செயற்பாட்டினை கண்டேன்.
சாதாரண சந்தேக நபரை முற்படுத்துவது போல் அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவில்லை என வித்தியா படுகொலை சம்பவம் தொடர் பான விசாரணைக்கு நியமிக் கப்பட்ட உயர் அதிகாரியான குற்றப் புலனாய்வு திணைக் களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பியகமகே சிசிர சிசேரா சாட்சிய மளித் துள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித் தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர் பான விசாரணையினை நீதாய விளக்கத்தின் (ரயல் அட்பார்) 9ஆவது அமர்வு நேற்றைய தினம் யாழ்.நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் 3ஆம் மாடியில் நடைபெற்றது.
நேற்றைய தினம் வழக்கின் 42ஆவது சாட்சியும், மாணவி கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு நியமிக்கப்பட்ட உயர் அதிகாரியுமான குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தி யட்கசர் பியகமகே சிசிர சிசேரா சாட்சிய பதி வுக்கு அழைக்கப்பட்டார். அவர் பிரதி மன்றா திபதி குமார்ரட்ணத்தினால் மன்றில் கேட்க ப்பட்ட வினாக்களுக்கு பதிலளித்தவாறே அவர் தனது சாட்சியத்தை பதிவு செய்தார்.
நான் குற்றப் புலனாய்வு திணைக்களத் தில் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடு மற்றும் விசேட பிரிவுகளில் கட மையாற்றுகின்றேன்.
பொலிஸ் திணைக்கள த்திலும், குற்றப் புலனாய்வு திணைக்களத் திலும் பல துறைகளில் கடமையாற்றியுள் ளேன். 2015ஆம் ஆண்டு நடுப் பகுதியில் குற் றப்புலனாய்வு திணைக்களத்தின் நிர்வாக மேற்பார்வையாளராக கடமையாற்றியிருந் தேன். பொலிஸ் கடமையில் நாட்டின் பல பகு திகளிலும் பணியாற்றிய 30 வருடகால அனுபவம் எனக்கு உள்ளது.
வித்தியா கொலை வழக்குத் தொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டு 5ஆம் மாதம் 19 ஆம் திகதி எமது திணைக்களத்தின் பணிப்பாளர் எனக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியிருந்தார்.
அந்த அழைப் பில் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறைப் பகுதி யில் பாடசாலை மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், அக் கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாரினால் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும், இதனால் அச் சம்பவம் தொடர்பான விசாரணையினை உடனடியாக பொறுப்பேற் குமாறு கூறினார்.
நாளை (20ஆம் திகதி) எனது விசாரணைக்குத் தேவையாக பொலிஸ் குழுவுடன் யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டு செல்லுமாறு கட்டளையிட்டார்.
அவருடைய கட்டளைப்படி உடனடியாகவே குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கூட்டுக் கொள்கைப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த ஜ.பி நிஷாந்த சில்வாவின் பொலிஸ் குழுவுடன் அலுவலக வாகனத்தில் யாழ்ப்பாணத்திற்கு புறப்பட்டுச்சென்றேன். 2015ஆம் ஆண்டு 5ஆம் மாதம் 20ஆம் திகதி நண்பகல் 2.30 மணியளவில் யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந் தோம்.
அன்று நாம் வரும் போது யாழ்ப்பாணத் தின் வீதிகளில் ரயர் எரிக்கப்பட்டுக்காணப் பட்டது. எரிந்து முடிந்த ரயர்களையும் காணக் கூடியதாக இருந்தது. இதுமட்டுமல்லாமல் வீதிகளில் கற்கள், பொல்லுகளும் காணப்பட்டது.
முதலில் யாழ்.பொலிஸ் நிலையப் பொறு ப்பதிகாரி பாலசூரியவை சந்தித்தேன். அவரி டம் இக் கொலைச் சம்பவம் தொடர்பில் 9 ஆவதாக கைது செய்யப்பட்ட மகாலிங்கம் சசிகுமார் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் கேட்டேன்.
அதற்கு அவர், யாழ்.பொலிஸ் நிலை யத்தில் முறைப்பாடு செய்தார், அதன் பின்னர் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார், பின்னர் பொலிஸ் அதிகாரி ஒருவரால் அவர் விடுவிக்கப்பட்டார் என தெரிவித்தார்.
ஆனால் பொலிஸாரினால் விடுவிக்கப்பட்ட சந்தேக நபர் வெள்ளவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 21ஆம் திகதி நள்ளிரவு ஒரு மணி அளவில் யாழ்.பொலிஸ் நிலை யத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். முற்படுத்தப்பட்ட சந்தேக நபரான மகாலிங்கம் சசிகுமாரிடம் விசாரணைகள் மேற்கொண்டு அவரின் வாக்குமூலத்தினை பதிவு செய்ய உத்தரவிட்டேன்.
குறித்த சந்தேக நபர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது தான் பொலிஸ் திணைக்களத்தின் அசாதாரண செயற்பாட்டினை கண்டேன்.
அதாவது சந்தேக நபரை ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் போது, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க தன்னுடைய வாகனத்தில் முன்சென்றார்.
அவருடைய வாக னத்தின் பின்னர் சுமார் 6 வாகனங்கள் தொடரணியாக போனது. அதில் விசேட அதிரடிப் படையினர், ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் இருந்தனர். சாதாரண சந்தேக நபரை முற்படுத்துவது போல் அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவில்லை.
பின்னர் எனது விசாரணைகளை யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் இருந்து ஆரம்பித்து, அப்பொலிஸ் நிலைய த்தின் உப பொலிஸ் பரிசோதகராக இருந்த சிறிகஜன் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களிடம் விசாரணை நடத்தி அவர்களின் வாக்குமூலங்களையும் பதிவு செய்ய
கட்டளையிட்டேன்.
மேலும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, குறிகாட்டுவான் பொலிஸ் காவலரணின் பொறுப்பதிகாரி, வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதி பர், யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதி பர், யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தி யட்சகர் உள்ளிட்டவர்களிடமும் வித்தியா கொலைச் சம்பவம் மற்றும் அதற்கு பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான வாக்கு மூலங்களை பதிவு செய்ய கட்டளையிட்டேன்.
பின்னர் வித்தியாவின் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினேன். 22ஆம் திகதி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அங்கு சில பொலிஸ் உத்தியோகஸ்தர்களை அழைத்துக் கொண்டு புங்குடுதீவு ஆலடிச் சந்திப்பகுதிக்கு அருகில் உள்ள வித்தியாவின் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்குச் சென்று கள விசாரணையினை செய்திருந்தோம்.
சடலம் காணப்பட்ட இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள வித்தியாவின் வீட்டிற்குச் சென்றோம். அங்கு வித்தியாவின் அம்மா, அண்ணா, அக்கா மற்றும் உறவினர்களிடமும் விசாரணை
நடத்தப்பட்டது.
அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யவும் உத்தரவிட்டேன். 23ஆம் திகதி வேலணைக்குச் சென்று வேலணை பிரதேச சபையின் தலைவரிடம் விசாரணை நடத்தி, அவரின் வாக்குமூலத்தினையும் பதிவு செய்தோம்.
ஜ.பி.நிஷாந்த சில்வாவுடன் சில குற்றப் புலனாய்வு உத்தியோகஸ்தர்களை வவுனி யாவிற்கு அனுப்பிவைத்து, வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் வாக்குமூல ங்களை பதிவு செய்யுமாறும் பணித்திருந்தேன்.
இவ்வாறு 29ஆம் திகதிவரை யாழ்ப்பாணத்தில் நின்று விசாரணைகளை முடித்துக் கொண்டு கொழும்பிற்கு அலுவலகவாகனத்திலேயே திரும்பிச் சென்றிருந்தேன். விசாரணைக்காக மீண்டும் நான் யாழ்ப்பாணத் திற்கு வரவில்லை.
இருப்பினும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 9 சந்தேக நபர்களையும் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனு மதியினை பாதுகாப்பு அமைச்சின் ஊடாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் பெற்று இரண்டு தவணையாக 60 நாட்கள் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத் தின் தலைமை அலுவலகத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண் டோம் என்று கூறி தனது சாட்சியப் பதிவினை செய்திருந்தார்.
பிரதான விசாரணையின் பின்னர் குறித்த சாட்சி எதிரி தரப்பு சட்டத்தரணிகளால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
குறுக்கு விசாரணைகளின் போது கேட்கப்பட்ட வினாக்களுக்கு பதிலளித்த சாட்சி, இவ் வழக்கின் 7ஆவது சந்தேக நபரிடம் நடத்தப் பட்ட விசாரணையின் அடிப்படையில் அவ ருடைய வீட்டில் இருந்து 4 கையடக்கத் தொலை பேசிகளை மீட்டதாகவும், வேறு சந்தேக நப ர்களின் வீட்டில் இருந்து மடிக்கணினி மற் றும் கையடக்கத் தொலைபேசியினை மீட்டதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு மீட்கப்பட்ட கையடக்கத் தொலை பேசி, மடிக்கணினி என்பவற்றை ஆய்வுகளு க்காக முதலில் மொரட்டுவ பல்கலைக்கழக த்திற்கும், பின்னர் ஷேட் ஆய்வு நிறுவனத்தி ற்கும் அனுப்பிவைத்தோம்.
குறிப்பாக அதில் உள்ள படங்கள், வீடியோக்கள் ஒலிப்பதிவுகள் என்பவற்றை ஆய்வுக்கு உட்படுத்தினோம்.
மற்றும் வித்தியா கொலை செய்யப்பட்ட நாளான 2015ஆம் ஆண்டு 5ஆம் மாதம் 13ஆம் திகதி எங்கு வைத்து குறித்த கையட க்கத் தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டவை என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்தினோம்.
அந்த ஆய்வுகளுக்கான பெறுபேறுகளும் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இருப்பி னும் அந்த பெறுபேறுகளில் எமக்குத் தேவையான எதுவும் கிடைக்கவில்லை. சடலம் கட்டப்பட்டிருந்த விதத்தினை பார்க்கும் போது இன மதத்தினரிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கான குழு ஒன்றின் கொடூர மான செயற்பாடு என உறுதியான சந்தேகம் எமக்கு இருந்தது. அதனால் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டது.
இவ்வழக்கில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு கீழ் தடுத்து வைக்கும் உத்தரவு சாதாரணமாக பெற்றுக் கொள்ளப்படவில்லை. எமது திணைக்களத்தின் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் விண்ணப்பம் செய்தோம்.
அதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சு அலுவலகத்திற்கு என்னை அழைத்தார்கள். அங்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்னிடம் நேரடியாக உரையாடி பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்துவதற்கான தகுந்த காரணங்களை அவருக்கு தெரியப்படுத்திய பின்னரே அதற்கான அனுமதி தரப்பட்டது என்றார். குறுக்கு விசாரணை முடிந்த பின்னர் வழக்கில் இருந்து சாட்சி விடுவிக்கப்பட்டது.
நேற்றைய வழக்கில் சாட்சியத்திற்காக அழைக்கப்பட்ட 35ஆவது சாட்சி இவ்வழ க்கு தொடர்பான முக்கிய விசாரணைகளை மேற்கொண்டதால், அவரின் சாட்சியப் பதிவு நீண்ட நேரம் எடுக்க வேண்டியுள்ளது.
இத னால் அவரின் சாட்சியத்தினை எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை மன்றில் முன் னிலையாகுமாறு மன்று உத்தரவிட்டது.
மேலும் வழக்கின் 49ஆவது சாட்சியான ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் 24ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சாட்சி யப் பதிவுக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
அவ் வழைப்புக் கட்டளையினை மாற்றி அன்றைய தினம் காலை 9 மணிக்கு மன்றில் சமுகமளிக்குமாறு அழைப்பாணை அனுப்புமாறு மன்று கட்டளையிட்டது.
அத்துடன் எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை வரைக்கும் வழக்கினை ஒத்திவைக்கவும், அதுவரையில் சந்தேக நபர்களை தடுத்து வைக்கவும் மன்று உத்தரவு பிறப்பித்தது.