இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கைப் பட்டியலிலிருந்து 150 இலங்கையர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
50 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் உள்ளிட்ட 150 பேரின் பெயர்கள் இன்டர்போலின் சிகப்பு எச்சரிக்கைப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தது. எனினும், இந்தப் பட்டியலிலிருந்து குறித்த பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைப் பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளே இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெடியவன், கர்தியன் மாணிக்கவாசகர், விநாயகம், பொன்னய்யா ஆனந்தராஜன், ஐயன் உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 50 பேரின் பெயர்கள் இன்டர்போல் தேடப்பட்டு வருவோரின் பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இவர்களை கண்ட இடத்தில் கைது செய்யுமாறு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
கைக்குண்டுகளை வைத்திருந்த முனியான்டி தர்மசீலன் மற்றும் ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள எமில்காந்தன் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே இந்த பட்டியலில் தற்பொழுது உள்ளடக்கப்பட்டுள்ளது. சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட குற்றவாளிகளின் பெயர்களை அந்த பட்டியலிலிருந்து நீக்கிய முதல் சந்தர்ப்பம் இதுவென குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கைப் பட்டியலிலிருந்து 150 இலங்கையர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 50 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் உள்ளிட்ட 150 பேரின் பெயர்கள் இன்டர்போலின் சிகப்பு எச்சரிக்கைப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தது. எனினும், இந்தப் பட்டியலிலிருந்து குறித்த பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைப் பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளே இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெடியவன், கர்தியன் மாணிக்கவாசகர், விநாயகம், பொன்னய்யா ஆனந்தராஜன், ஐயன் உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் 50 பேரின் பெயர்கள் இன்டர்போல் தேடப்பட்டு வருவோரின் பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இவர்களை கண்ட இடத்தில் கைது செய்யுமாறு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
கைக்குண்டுகளை வைத்திருந்த முனியான்டி தர்மசீலன் மற்றும் ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள எமில்காந்தன் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே இந்த பட்டியலில் தற்பொழுது உள்ளடக்கப்பட்டுள்ளது. சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட குற்றவாளிகளின் பெயர்களை அந்த பட்டியலிலிருந்து நீக்கிய முதல் சந்தர்ப்பம் இதுவென குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கைப் பட்டியலில் இருந்து 150 இலங்கையர்களின் பெயர்கள் நீக்கம்!
Related Post:
Add Comments