“தீர்வுத் திட்டம் எந்த நிலைக்கு வந்துள்ளது என்று எனக்குத் தெரியாது. என்னோடு கலந்தாலோசிக்கவும் இல்லை. எனக்கு அறிவிக்கவும் இல்லை. ஆறு உப குழுக்களின் அறிக்கைகளை அனுப்பினார்கள். அதன் பின்னர் என்ன நடவடிக்கை என்று எங்களுக்குத் தெரியாது. ஓரளவுக்குத் தெரிந்த அளவில் மூன்று விடயங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் போல் உள்ளது. அந்த மூன்று விடயங்களும் எங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அது கட்டாயமானது.கூட்டாட்சி அரசமைப்பு, வடக்கு -கிழக்கு இணைப்பு, சுயாட்சி இவை மூன்றும் புதிய அரசமைப்பில் உள்ளடக்கப்படவேண்டும். கூட்டாட்சி என்ற சொல்லைப் புகுத்தினால் சிங்கள மக்கள் எதிர்ப்பார்கள் என்று சொல்லி, ஏக்கிய ரட்ட என்று சொல்லப் பார்க்கின்றார்கள். இது ஒருமித்த நாடு. அதனை ஒற்றையாட்சி என்றும் எடுக்கலாம். அதற்கு வியாக்கியானம் எல்லோரையும் சேர்த்த நாடு என்று சொல்லப் பார்கின்றார்கள். ஆனால் அது சரிவராது. சட்டங்களில் சிங்கள மொழி வியாக்கியானம்தான் முதன்மையானது என்று இருக்கின்றது. ஏக்கிய என்ற சிங்களச் சொல்லைப் பாவித்தால், அது ஒற்றையாட்சி முறைமையைத்தான் குறிக்கும். அவர்கள் ஒற்றையாட்சி என்றுதான் சொல்வார்கள். அதனால் ஏக்கியவை விட்டு எக்சத் என்று போடுங்கள் என நான் ஆலோசனை கூறினேன். அந்தச் சொல் ஒன்றிணைந்த என்பதைக் குறிக்கும். ஏக்கிய என்ற சொல்லால் பாதிப்பு இல்லை என்ற முறையில் சம்பந்தன் கதைத்தார். எக்சத் என்று பாவித்தால் சரியாக இருக்கும் என்று அவரிடமும் எடுத்துக் கூறினேன். ஒற்றையாட்சி என்பது சிங்கள – பௌத்த மக்களுக்கு கூடிய உரித்தையும் அதிகாரத்தையும் கொடுத்து, எங்களுடைய சகல அதிகாரத்தையும் குறைத்து குறைத்துக் கொண்டு போகின்ற நிலைமையை உருவாக்கும். அடுத்தது வடக்கு-கிழக்கு இணைப்பு. அதற்கும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றார்கள். வடக்கு கிழக்கு இணைப்பை கேட்க வேண்டிய அவசியம் எங்களுக்கு ஏன் இருக்கின்றது என்றால் கிழக்கு மாகாணத்தில் 1949ஆம் ஆண்டு இருந்த சிங்களவர்களின் எண்ணிக்கைக்கும் இப்போதுள்ள சிங்கள மக்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். சிங்கள மக்கள் உட்புகுத்தப்பட்டிருக்கின்றார்கள். வடக்கு – கிழக்கு இணையாவிட்டால் 20 ஆண்டுகளில் எங்களின் தனித்துவம் போய்விடும். தற்போது எங்களின் சுயாட்சிக்கு பங்கம் ஏற்படுத்தும் விதத்தில்தான் நடைமுறை இருக்கின்றது. சுயாட்சியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் எங்களின் தனித்துவம் பறிபோகும் என்றார். |
அரசியலமைப்பில் சுயாட்சி உள்ளடக்கப்படாவிட்டால் தமிழர்களின் தனித்துவம் பறிபோய் விடும்! - முதலமைச்சர்
Related Post:
Add Comments