
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயு தக் கப்பல்களை மூழ்கடித்ததால் பாது காப்பு அச்சுறுத்தல் தொடர்வதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சின்னையா தெரிவி த்துள்ளார். வைஸ் அட்மிரல் சின்னை யா கடற்படைத் தளபதியாக பதவி யேற்றபின்னர் நேற்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டவேளை தனது வெளிப்பாட்டைத் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் மீண்டும் போர் ஏற்படுவதற்கான சூழல் உருவாகுமென நான் நினைக்க வில்லை. விடுதலைப்புலிகளின் பல கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதால் அச்சுறுத்தல் என்னைத் தொடர்ந்த வண்ணமுள்ளது.
போர் முடிவுக்கு வந்தாலும் எனக்கு அச்சுறுத்தல் தொடர்கின்றது. என்னுடைய காலத்தில், கடற்படையிலும், அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதிப் பயன்பா டுகளிலும் வெளிப்படைத் தன்மை பேணப்படும். அத்துடன் சிறிலங்கா கடற்ப டையை அதிகமான திறமை மற்றும் தொழிற்திறன் கொண்டதாக மாற்றுவதே எனது இலக்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்.